பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 227 வகை வழக்கினையுடைய நோன்பிற்குரிய நீத்தார்கள், தத்தம் பகுதித்துறைகளை நன்கறிந்து போர் செய்யும் வீரர்கள். இன்னும் குறிப்பிடப்படாத. நாட்டுக்குப் பயன்படும் துறைகளில் ஈடுபடும் மக்களும் தமிழ் நாட்டில் இருந்துள்ளார்கள். அவர்கள் அடையும் வெற்றிகளை அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் இயற்றினால் அவை வாகைத் திணையின் பாற்படும் என்பதாம். வாகைத் திணையின் வகைகள் பதினெட்டு எனவும் "கூதிர்வேனில்' என்று தொடங்கும் நூற்பாவால் பிரித்துரைக்கின்றார். அப்பதினெட்டுள் மற(வீர) வகைக்கு ஒன்பதும் அறவகைக்கு ஒன்பதும் இடம் பெற்றுள்ளன. மறத்துக்குரியன :- 2. 1. குளிர் காலம் கோடைக்காலம் எனப்படும் காலங்களில் போர் விருப்பமுடையோராய்ப் பாசறையிலிருந்து போர்க் கடன் ஆற்றுதல். உழவர்கள் நெற்போர்க் களத்திலும் வீரர் கள் போர்க் களத்திலும் வீறு பெற்றுயர்தல். 3. வென்ற மன்னனின் தேர்முன் நடைபெறும் குரவைக் கூத்து. 4. வென்ற மன்னனின் தேரின்பின் நடை பெறும் குரவைக் கூத்து. 5. தம்மினும் பெரிய பகைவரை வெல்லும் ஆற்றல். 6. தடுத்தற்கரிய பகைவர் படையைத் தடுத்து நிறுத்தல். 7. பொருந்தாத நிலையற்ற வாழ்வில் காட்டப் படும் வலிய ஆண்மையை வெளிப் படுத்துதல்.