பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 தொல்காப்பிய ஆராய்ச்சி அரசு புலவர்கள் தாம் அக்காலத்து அரசர்தம் அறிவுரை யாளர்கள்: மக்களை நல்வழிப்படுத்தும் விதிகள் பல அமைக்கும் சட்ட மன்றம் போன்றவர்கள். அரசரே யாயினும் யாவரே யாயினும் நெறிதவறிச் சென்றால் அதனை எடுத்துக்காட்டி நேர்வழி நடக்க அறிவுரை கூறுவார்கள். இக்காலத்து மக்களாட்சி மக்களுக்குக் கேடு பயக்கும் நெறி முறைகளை மேற் கொள்ளத் தொடங்கினால் எதிர்க் கட்சிகள் எதிர்த்து நின்று அரசின் குற்றங்களை எடுத்து இயம்புகின் றன. அக்காலத்தில் கட்சி முறையில் ஆட்சி இல்லை. ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் இல்லை. ஆகவே புலவர் களே அப்பணியையும் ஆற்றி வந்தனர். 'செவியறி வுறூஉ" வாயுறை வாழ்த்து' என்பன புலவர்கள் பிறரைத் திருத்துவதற்காகப் பாடுவனவே. மேனாட்டில் அரசியலறிஞர்கள் பலர்-உரூசோ. காரல் மார்க்சு, பெயின், மெக்காலே போன்றவர் கள் - அவர்தம் காலத்து அரசைத் திருத்துவதற் காக எழுதப்பட்ட கட்டுரைகள், நூல்கள், இன்று பேரிலக்கியங்களாய்த் திகழ்கின்றன. அவ்வாறே. தமிழ் நாட்டிலும் அரசைத் திருத்த - நல்வழிப் படுத்த- செங்கோலாட்சி புரியக் கூறிய கருத்து நிறைந்த பாடல்கள் பேரிலக்கியப் பகுப்பினுள் அடங்குவனவாய் உள்ளன. புலவர்கள் பொருள் கருதிப் புகழ்ந்து பொய்வாழ்வு நடாத்தினர் என்று கருதுதல் கொடிது. இடித்துரைத்து மக்களுக்கு ஏமம் நாடும் காவலர்களாய் இலங்கினர். அவர்கள் பாடல்கள் இலக்கண ஆசிரியர்களால் துறைகள் வகுக் கப் பெற்றுப் பின்வரும் புலவர்கட்கு முன் மாதிரி யாய்த் திகழும் நிலை பெற்றன. அவ்வாறு தோன்றிய இலக்கியங்களைக் கொண்டுதானே ஆசிரியர் தொல்.