பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-236 தொல்காப்பிய ஆராய்ச்சி 6. மெய்ப்பாட்டு இயல் "மெய்ப்பாடு என்பது பொருட்பாடு; அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோராற்றான் வெளிப் படுதல்." இவ்வாறு பேராசிரியர் கூறியுள்ளார். உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப உடலில்' தோன்றும் வேறுபாடு என்பதுதான் "மெய்ப்பாடு என்பதன் பொருள். புளியை உண்டால் உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப முகம் சுளிக்கின்றது. எதிர் பாராத விதமாக அருகில் அரவம் இருக்கக் கண் டால் அஞ்சுகின்றோம். அவ்வச்சத்தால் ஏற்படும் உணர்ச்சிக்கேற்ப உடல் நடுங்குகின்றது. இலக்கியத் தைப் படிக்கும்போதும் இலக்கியத்தின் இயல்புக் கேற்ப நம் உள்ளத்தில் உணர்ச்சி உண்டாகின்றது. அவ்வுணர்ச்சிக்கேற்ப நம் முகத்தில் வேறுபாடுகள் தோன்றுகின்றன. கவிச்சுவையும் இலக்கியச் சுவை யும் நம் உள்ளத்தில் உணர்ச்சியைத் தோற்றுவிக்கின் றன. இயல், இசை, நாடகம் எனும் மூன்றில் நாட கத்தில் நடிப்போரும் உணர்ச்சியை வெளிப்படுத்து. வார். காண்போரும் உணர்ச்சிக்கு ஆளாவார். இசைத் தமிழ் பாடுவோரும் உணர்ச்சி வேறுபாட்டு டன் பாடுவார். கேட்போரும் உணர்ச்சி வயப்படுவர். இயல் தமிழ் ஒன்றே தாமாகப் படித்தும் உணர்ச்சி பெறத் துணையாவது. ஆதலின் மெய்ப்பாட்டா