பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 தொல்காப்பிய ஆராய்ச்சி கரும்பு நடுபாத்தி கலித்த தாமரை சுரும்புபசி களையும் பெரும்புனல் ஊர 19 எனும் ஐங்குறுநூற்றுப் பாடல் அடிகளில் கரும்பு. நடுவதற்கு அமைக்கப்பட்ட பாத்தியுள் தானாக வளர்ந்த தாமரை, வண்டுகளின் பசியை நீக்குகின்றது என்று கூறப்பட்டுள்ளது. தெரிவிக்க விரும்பிய பொருள் இதுவன்று. வீடு காதற் பரத்தைக்கும் இல் பரத்தைக்கும் அமைக்கப்பட்டது. அதில் தலைவி வந்து இருந்து கொண்டு இல்லறக் கடன்பூண்டு ஒழுகுகின்றாள் என்பதே தெரிவிக்க விரும்பிய பொருள். தனக்கு உரிமை இல்லை யென்றும் பரத்தைக்கே இவ்வீட்டில் உரிமை இருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டித் தலைவனைத் திருத்த விரும்பியவள் அதனை வெளிப்படையாகக் கூறுதல் நன்றன்று என்று இவ்வாறு மறைத்துக் கூறுகின்றாள். கூறப்பட்டுள்ள பொருளிலிருந்து கருத்தினால் கொள்ளவேண்டியது. இவ்வாறு வருவதே " உள்ளுறை உவமம்'. இஃது உவமப்போலி எனவும் அழைக்கப்படும். இது ஐந்து வகைப்படும். வினை, பயன், மெய், உரு,பிறப்பு என்பனவற்றின் வழியே தோன்றும் ஐந்தும் அவ்வகையாகும். இவ்வுள்ளுறை பெருக்குவதாகும். உவமம் செய்யுளின்பத்தைப் இதனைக் கூறுவதற்குப் பல விதி முறைகள் உள. தலைவன், தோழி, செவிலி முதலியோர் கூற்றாக அமையுங்கால் சில வரையறைக்கு உட்படும். உவமைகளில் தடுதாறுவமம், நிரல்நிறை போன்ற உவமைகள் சிறப்புடையன. பிறவெல்லாம் பொருள் கோளில் அடங்கும்; அணியெனப்படா.