பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 தொல்காப்பிய ஆராய்ச்சி மூடும் கடமையும் பெயர்கள். பாட்டி வற்றுள் நந்துக்கும் உரியது. ஆட்டுக்கே உரிய பெண்பால் என்பது பன்றி, நாய், நரி என்பவற்றின் பெண் பாலைக் குறிக்கும் என்றார் ஆசிரியர். ஆனால் இன்று மக்களில் வயது முதிர்ந்த பெண்ணையும், பெற்றோ ரின் தாயையும் குறிக்க வழங்குகின்றது. இச்சொல் உயர்பொருட்பேறு என்னும் நியதிக்கு உட்பட்டுவிட்டது. மந்தி என்னும் சொல் குரங்கும் மூசுவும் ஊகமும் ஆயவற்றின் பெண்பாலைக் குறிக்கும். இன்னும் சிற் சில பகுதிகளில் சிற்சிலவற்றிற்கு வழங்கிவந்த பெயர் களைக் குறிப்பிடுகின்றார். அவை பின்வருமாறு: குரங்கின் ஏற்றினைக் 'கடுவன் என்றலும், மரம் பயில் கூகையைக் ′ கோட்டான்' என்றலும் செவ்வாய்க் கிளியைத் 'தத்தை' என்றலும், வெவ்வாய் வெருகினைப் 'பூசை' என்றலும், குதிரையுள் ஆணினைச் 'சேவல்' என்றலும், இருள்நிறப் பன்றியை 'ஏனம்' என்றலும், எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும், முடியவந்த அவ்வழக்கு உண்மையின் கடியல் ஆகாக் கடன் அறிந் தோர்க்கே.' இந்நூற்பா எவ்வளவு தெளிவாகவும் எளிதாகவும் இனிதாகவும் அமைந்துள்ளது. ஆங்காங்கு வழங்கி வருகின்ற பெயர்களைத் தொகுத்துத் தந்துள்ளார். இலக்கியம் கற்போர்க்கும், இலக்கியம் இயற்று வோர்க்கும் மிகமிகப் பயன்படும் அன்றோ? மரம் செடி கொடி முதலியனவற்றை இரண்டு வகையாகப் பிரித்துள்ளார். வெளிப்பக்கம் வைரம் பொருந்தியனவற்றைப் 'புல்' என்றும் உட் பக்கம் வைரம் பொருந்தியனவற்றை 'மரம்' என்றும். அழைத்துள்ளார். 'புல்' என்னும் பிரிவுக்கு உட் பட்டனவற்றிற்குரியனவாய் அவற்றின் உறுப்புக்