பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 259 யாகும். இவ்வாராய்ச்சிக்குக் கால்கோளிட்டவர் ஆசிரியர் தொல்காப்பியர் ஆவார். நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்' வீறு வேற்று நாட்டார் எல்லாரும் இவ்வைந்தினையும் ஆட் படுத்தி விசும்பு வெளியையும் தமதாக்கி கொண்டு உலவுகின்றனர். தொல்காப்பியர் வழிவந்த தமிழரோ தொல்காப்பியரையும் அறியாது தொல் மெய்ப்பொருள் ஆராய்ச்சியுமின்றித் துன்ப வாழ்வில் துயில் கொண்டு இன்பவுலகு என்று காண்போம் என்று ஏங்கி நிற்கின்றனர். உறக்கம் நீங்கி உண்மை காண்பார்களாக! தொல்காப்பியம் துணை செய்வ தாக/