பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 தொல்காப்பிய ஆராய்ச்சி முப்பத்து நான்கினையும் ஒருங்கே தொகை கொடுத்துக் கூறாமல் 'இருபத்தாறு' என ஒரு பிரிவும், 'எட்டு' என மற்றொரு பிரிவுமாகக் கூறியது காரணம் பற்றியே யாகும். இருபத்தாறு உறுப்புக்களும் செய் யுளில் தவறாது ஒருங்கே அமையும் உறுப்புக்கள். ஏனைய எட்டும் ஓரோர் செய்யுட்கு ஒரோ வொன்றே யும் வரும் என்பதற்கும். அவையும் செய்யுள் பல தொடர்ந்த வழியே உறுப்பாக வரும் என்பதற்கும் ஆகும். தொல்காப்பியம் முழுவதும் - எழுத்து - சொல் - பொருள் - பரந்து கிடந்தவற்றை இந்நூற்பாவில் தொகுத்துக் கூறியுள்ளார். மொழியைக் கற்று இலக்கியம் இயற்றுவதற்குப் பயன்படும் நூலாகவே தொல்காப்பியம் ஆக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பான் மொழிந்துள்ளார் ஆசிரியர். இலக்கியமாம் செய்யுள் பாட்டு என்றும், உரை என்றும் இருவகைப்படும். பாட்டில் எழுத்து, அசை, சீர், தளை, அடி. தொடை என்பன இன்றியமையாது அமையப் பெறுவன. எழுத்தைப்பற்றி எழுத்துப் படலத்தில் அறிந்தனவே ஆம். அசை நேர் என்றும், நிரை என்றும் இருவகைப்படும். குற்றிய லுகரம் அடுத்து வருங்கால் நேர்பு என்றும், நிரைபு என்றும் பெயர் பெறும். பிற்காலத்தில் இவை வழக்கு வீழ்ந்து விட்டன. சீர் அது பயின்று வரும் பாமுறைக்கு ஏற்ப, ஆசிரிய உரிச்சீர் என்றும், வெண்பா உரிச்சீர் என்றும், வஞ்சி உரிச்சீர் என்றும் பெயர் பெறும். தளையும் சீர் இரண்டும் சேருங்கால் அமைவதே யாயினும் பாவிற் கேற்பப் பெயர் பெறும்.