பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 267 பாக்கள் அடி வரையறை யுடையன எனவும் அடி வரையறை இல்லன எனவும் இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அடிவரையறை இல்லாதன, நூல்,உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு என்பனவாம். இவை களைப் பற்றிய இலக்கணங்கள் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. 'மந்திரம்' என்பது தமிழ்ச் சொல்லே. தமிழுக்குரியதே. 'பண்ணத்தி' என்று ஒரு வகை கூறப்படுகின்றது. அது பாட்டிடைக் கலந்த பொருளோடு வரும் எனப்படுகின்றது. இதனைப் பற்றிப் பேராசிரியர் பின்வருமாறு கூறி யுள்ளார். "மெய் வழக்கல்லாத புறவழக்கினைப் பண்ணத்தி என்ப. இஃது எழுதும் பயிற்சியில்லாத புறவுறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி என்ப என்பது. அவை யாவன நாடகச் செய்யுளாகிய பாட்டு மடையும், வஞ்சிப் பாட்டும், மோதிரப் பாட்டும், கடகண்டும் முதலாயின. அவற்றை மேலதே போலப் பாட்டென் னாராயினார். நோக்கு முதலாயின உறுப்பின்மையின் என்பது. அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க." பேராசிரியரே வல்லார் வாய்க் கேட்டுணர்க என்று வாளாவிடுப்பரேல் அவர் காலத்தில் பண் ணத்தி வழக்கற்றுப் புலவர்களும் அறிந்து கொள்ள முடியாத நிலையை அடைந்துவிட்டது என்று தான் கருதுதல் வேண்டும். உரைநடை பற்றி உரைத்துள்ளார். தொல்காப் பியர் காலத்தில் நான்கு வகையான உரைநடைகள் வழக்கில் இருந்துள்ளன போலும். உரைநடை விரி வாக எழுதவேண்டிய ஒன்று. பனை ஓலையில் எழுத் தாணியால் எழுதிய காலத்தில் விரிவாக எவரும் எழுத