பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 தொல்காப்பிய ஆராய்ச்சி இவ்வாறு சிறப்புப் பெயர் வந்து இயற்பெயரை மறக்கச் செய்தமைக்குச் சான்றுகள் தமிழில் ஒன்றா? இரண்டா? பற்பல உளவே. (பேராசிரியர், உரையாசிரியர், சேக்கிழார். தொடித்தலை விழுத்தண்டினார்). தொல்காப்பியத்தின் எழுத்தும் சொல்லும் மொழி நூல் (Science of language) என்றும், பொருள் இலக்கியம் பற்றிய நூல் (Science of Literature) என் றும் கூறி அவ்வகையில் தொல்காப்பியத்தை ஆராய்ந் தோம். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னர் தமிழ் மொழியின் நிலையும் தமிழ் இலக்கிய நிலையும் எவ்வாறு இருந்தன என்பதை அறிந்தோம். இவ்வாறு அறிவதும் தமிழ் மக்கள் வரலாற்றின் ஒரு பகுதிதானே. மொழியினால் உருவாகிய மக்கள் இனத்தை அறிவதற்கு முன்னர் மக்களினத்தால் உருவாகிய மொழியைப்பற்றி அறிவதும் வேண்டி யதுதானே. மொழி நூலறிஞன் வரலாறு அறிய வேண்டும்; வரலாற்று அறிஞன் மொழி நூல் அறிய வேண்டும். தமிழக மக்களின் வரலாற்றை அறிவ தற்குத் துணையாகத் தமிழ்மொழி பற்றியும் தமிழ் இலக்கியம் பற்றியும் அறிந்தோம். ஏனைய மொழி களில் இலக்கிய ஆராய்ச்சி நூல்கள் (Criticism of Literature) உண்டு; ஆனால் இலக்கிய இலக்கணம் (Science of Titerature) இவ்வளவு விரிந்த முறையில் தனி யாகச் செய்யப்பட்டிலது. தமிழில்தான் உண்டு என் பதை அறிந்தோம். அதனால் தமிழ் மொழியின் சிறப் பும் ஏற்றமும் வளமும் தெற்றெனப் புலனாகின்றன. இந்திய மொழிகளுள் ஆரியமல்லாத பிறவெல் லாம் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகே இலக் கியத் தோற்றத்தைப் பெற்றுள்ளன. ஆரியமும் இந்