பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தொல்காப்பிய ஆராய்ச்சி வேண்டும். ஆகவே முதலில் தோன்றியது உரையா டும் மொழியே. மொழி" என்ற சொல்வே அதனை நன்கு விளக்குகின்றது. மொழியப்படுதலின் மொழி எனக்கூறினர் நம் முன்னோர். உரையாடி உள்ளக் கருத்தை அறிவிப்பதற்குப் பயன்பட்ட மொழியா னது முகத்துக்கு முகமாக நேர்நின்று கருத்தறிவிக் கும் கருவியாக மட்டுமே பயன்பட முடிந்தது. சேய் மையில் உள்ளோர்க்கு அறிவிக்கவும், நிகழ்காலத்தில் நடந்ததை வருங்காலத்திற்கு அறிவிக்கவும் எழுத்து மொழி இன்றியமையாததாய் விட்டது. உரையாடும் சொற்களில் உள்ள ஒலிக்கூறுகளை உற்று நோக்கினர். ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு வடிவத்தை உண்டுபண்ணினர். தமிழில் வழங்கும் தமிழ்ச் சொற்களை ஒலி நுட்பம் வாய்ந்தார் உற்று நோக்கினர். முப்பது முதன்மை ஒலிகள் பின்னிப் பிணைந்து சொற்களாக வழங்குதலைக் கண்டனர். தமிழில் வழங்கும் சொல்லாக்கத்திற்குப் பயன்படும் ஒலி வடிவங்கள் முப்பது என்று கண்டு அவற்றை எழுதுவதற்குத் தனித்தனி வடிவங்கள் அமைத்தனர். தமிழில் எழுத்து என்னும் சொல் ஒலி வடிவத்தையும் குறிக்கும்; வரி வடிவத்தையும் குறிக்கும். . 'அவன்', 'அவள்', 'அவர்' என்னும் சொற் களை ஒலிக்கூறு படுத்திக் காணுங்கால், 'அ', 'வ' ' ன்', ' ள்', 'ர்' என ஒலிகள் வேறுபடுதலைக் கண்ட னர். 'அகம்', 'அறம், 'அரண்' எனும் சொற் களை நோக்குங்கால் க், ற், ர் எனும் ஒலிகளோடு 'அ' எனும் ஒலி இணைந்து ஒலிப்பதை அறிந்து, க் ற்,ர் போன்றவற்றை உடல் என்றும், 'அ' போன் றதை உயிர் என்றும் அழைத்தனர். முப்பது ஒலி களில் பன்னிரண்டு உயிர் எனவும் பதினெட்டு மெய் (உடல்) எனவும் அழைக்கப்பட்டன. உடல்உயி