பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தொல்காப்பிய ஆராய்ச்சி "தமிழ் நெடுங்கணக்கு ஆரிய நெடுங்கணக்கைப் பின்பற்றியே அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அவ் வாறு அமைக்கப்பட்டகாலை அது தமிழ் ஒலி நுட்பத் திற்கேற்ப ஐவருக்க முதல் கடைகளை மட்டும் ஏற்று. நடுவில் உள்ள மூன்று எழுத்துக்களை விட்டுவிட் டது" என்று கருகிக் கூறியுள்ளார். ஆரியம் தமிழ் வழியில் நெடுங்கணக்கை அமைத்ததா? தமிழ் ஆரியத்தின் வழியில் நெடுங்கணக்கை அமைத்ததா? என்று அறிய ஆராயப் புகுந்தால் அறிஞர் கால்டுவெல் கருதுவது போல் தமிழ் ஆரியத்தைப் பின்பற்றி நெடுங்கணக்கை அமைத்துக்கொண்டுள்ளது என்று கூறுவதைவிட ஆரியம் தமிழைப் பின்பற்றி நெடுங் கணக்கை அமைத்துக் கொண்டது என்று கூறலே வலியுடைத்து. நெடுங்கணக்கை அமைத்துக் கொண்டது மட்டுமன்றி, நெடுங்கணக்கின் எழுத்துக் களைப் படைத்துக் கொண்டதும் ஆரியர் தமிழர் களின் கூட்டுறவைக் கொண்ட பிறகே,தமிழ் நெடுங் கணக்கை அறிந்த பின்னரே, நிகழ்ந்த தொன்றாகும் என்று கூறுவதற்கு இரண்டு நெடுங்கணக்குகளையும் ஒப்பு நோக்கி ஆராயுங்கால் சான்றுகள் புலப்படு கின்றன. நன்னூலியற்றிய பவணந்தியார் காலத்தில் ஆரியத்திற்கும் தமிழுக்கும் பொதுவாக இருபத் தைந்து எழுத்துக்கள் அமைந்துள்ளன என்று அவர் கூறும் நூற்பாவால் அறியலாம். அவர் கூற்றுப்படி உயிர் எழுத்துக்களுள் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ. ஓ, ஒள எனப் பத்தும், மெய் எழுத்துக்களுள் கங, சஞ, டண, தந, பம எனவரும் ஐவருக்க முதல் கடை எழுத்துக்களாம் பத்தும் ய, ர, ல, வ, ள எனும் 1. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம். 2. நன்னூல் -பதவியல்- ரு.16