பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து 51 சிலர் கருதுவர்: அது தவறு. தமிழ் நெடுங்கணக்கைக் கண்டு ஆரிய மொழி நெடுங்கணக்கு, திருத்தி அமைக் கப்பட்டது என்று முன்பே கூறியுள்ளோம். ஆகவே ஆரியம்தான் தமிழைக்கண்டு இவையிரண்டையும் தன் நெடுங்கணக்கில் சேர்த்திருக்கவேண்டும். இன்னும் சிலர் தமிழ் நெடுங்கணக்கில் எழுத்து மிகுந்துள்ள தாகக் கருதி 'ஐ, ஒள, என்ற உயிர் எழுத்துக்களை அகற்றுவதோடு, ன, ந என்பனவற் றுள் ஒன்றையும், 'ற, ர' என்பனவற்றுள் ஒன்றை யும் அகற்றிவிடலாம் என்பர். "ஆங்கிலத்தில் இருபத் தாறு எழுத்துக்களே இருப்பதுபோல் தமிழிலும் இருக்கவேண்டும்; கற்போர்க்கு எளிமையாய் இருக்க வேண்டும்" என்று கருதி மேற் கூறியவாறு தமிழ் எழுத்துக்களைக் குறைக்கவேண்டும் என்று கூறு கின்றனர். ஆங்கில மொழியில் இருபத்தாறு எழுத் துக்களே இருப்பதனால், ஓர் எழுத்தே இரண்டு மூன்று ஒலிகளைக் குறிக்கவேண்டியுள்ளது. அதனால் அம்மொழியைப் புதிதாகக் கற்போர் அடையும் இடர்ப்பாடு அளவிட்டுரைத்தல் ஆகாது. தமிழ் மொழியைப்போல் அம் மொழியில் நெடில்கள் இல்லாக் குறையாலும் எவ்வளவோ இடர்ப்பாடுண்டு. ஆங்கில மொழியின் குறைபாட்டை அறிந்த ஆங்கில மொழி நாடகப் பெரும் புலவராம் பெர்னாட்சா, அதனைத் திருத்தி யமைப்பதற்கெனத் தம் பெரும் பொருளில் ஒரு பகுதியைச் செலவழிக்க அறக்கொடை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் ஆங்கிலேயர்களோ தம் மொழிப்பற்று மிகுதியால் அதனைப் புறக்கணித்து விட்டனர். ஐரிசுக்காரராம் பெர்னாட்சா ஆங்கில மொழி நுட்பம் அறியவல்லாரோ' என அப்பெரும் புலவரை இகழ்ந்துவிட்டனர். ஆனால் நம் தமிழர் களோ தமிழ் மொழியின் ஒலி நுட்பத்தையும் எழுத்