பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து 79 குற்றியலுகரத்துக்கு அடுத்துவரும் எழுத்துக்க ளைக் கொண்டே அவைகளுக்குப் பெயரிடப்பட்டுள் ளன. இவ்விடங்களில் வரும் உகரம் பிற இடங்களில் வரும் உகரத்திலும் ஓசை குறைந்திருப்பதால் குற்றிய லுகரம் எனப்பட்டது. வல்லின மெய்கள் சொல்லினிறுதியில் வருங்கால் ஒலிப்பது எளிதாக இன்று, ஆதலின் உகரத்தைச் சேர்த்து ஒலித்தனர் போலும், அவ்வுகரமும் தனக் குரிய மாத்திரையினைப்பெறாது அதனினும் குறைந்து ஒலிக்கின்றது. இன்று ஏனைய மெய்களில் முடியும் சொற்களிலும் உகரம் சேர்த்து ஒலிக்கக் காண்கின் றோம். நானு ; கேளு; நெல்லு. தெலுங்கு மொழியில் எல்லா மெய்களும் இறுதியில் உகரத்தைச் சேர்த்துத் தான் ஒலிக்கப்படுகின்றன. இவ்வாறு உகரம் சேர்த்து எளிதாகக் கூறப்படுவதினாலேயே தெலுங்கு இன்னோசையுடைய மொழியெனக் கூறப்படுகின் றது. இவ்வாறு வல்லின மொழிந்த ஏனைய மெய்களிலும் உகரம் சேர்ந்த காலம், தெலுங்கு தமிழினின்றும் பிரிந்த காலத்திற்கும் பிறகுதான் என்று அறியலாம். மலையாள மொழியில் இக் குற்றியலுகரம் வரு மிடங்களில் குறில் அகரம் இடம் பெறுகின்றது. வட மலையாளத்தில் இக் குற்றியலுகரம் இன்னும் குறிய தாக்கப்படுகின்றதாம். ஆங்கு இதனை வரிவடிவில் காட்டாமல் ஈற்றெழுத்தின்மீது சிறுபுள்ளி இடப் பட்டுக் காட்டப்படுகின்றதாம்: கிழக்கு - கிழக்க். இக் குற்றியலுகரத்தை 'ஒலிப்பு உகரம்' என்று அழைக்கலாம் என்றும், இதனைப் பயன்படுத்தும் முறையும் செயலும் இந்திய ஐரோப்பிய மொழி வழக் கிற்குப் புறம்பானவை என்றும், இது வடமொழியி லிருந்து கொள்ளப்பட்டது அன்றென்றும், வட