பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளவியாக்கம் 97 jo W-5.7 அவற்றுள்' வினைவேறு படுஉம் பலபொரு ளொருசொல் வேறுபடு வினையினு மினத்தினுஞ் சார்பினுந் தேறத் தோன்றும் பொருடெரி' நிலையே. 53 பா.வே. 1. பதிப்பு 76இல் இச்சொற்சீரடி இல்லை. பின்வரும் குறிப்பு உள்ளது. 'ஏனைய உரையாசிரியர் அவற்றுள் என்று தொடங்குவர். துறைசை ஏடும் அவ்வாறே பாடம் ஒதும்.' 2. படும் - சுவடி 115. எழுத்துப்பிழை. அளபெடை விடுபாடு. 3. வேறுபடும் - சுவடி 60. மகரமெய் மிகை 4. பொருடரு - சுவடி 164. எழுத்துப்பிழை. டெரி > டரு. 5.38–54 ஒன்றுவினை மருங்கி னொன்றித் தோன்றும். 54 இந் நூற்பாவையும் அடுத்ததையும் சேனா ஒரே நூற்பாவாகக் கொண்டுள்ளார். ஏனையோர் அனைவரும் இரண்டாகவே கொண்டுள்ளனர். பதிப்பு 78 சேனாவரையரைப் பின்பற்றியுள்ளது." 5,79–55 வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல் நினையுங் காலைக் கிளந்தாங் கியலும். 55 540–55 குறித்தோன் கூற்றந் தெரித்துமொழி கிளவி, 55 + ...ஒரு சூத்திரமாக உரையாசிரியர் பிரித்தாரால் எனின், அங்ங்ணம் பிரிப்பின் ஒன்றுவினை மருங்கி னொன்றித் தோன்றுதலும் வினைவேறுபடுஉம் பலபொருள் ஒருசொற்கே இலக்கணமாய் மாறுகோடலானும், வினைவேறுபடுவன தாமே பொதுவினை கொண்டவழி வினைவேறுபடாதனவாம் என்பது அதனாற் பெறப்படாமையானும் அது போலியுரையென்க. சேனா. 'ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும் என்பது வினைவேறுபடாப் பலபொருளொருசோற்கு அடையாய் அதனை விளக்கி நின்றது. இதனைத் தனிச் சூத்திரமாகக் கொள்ளின் அஃது மாறுபடக் கூறலாய் முடியுமென்க. பால. (பதிப்பு. 78 பக். 77)