பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 50 சொல்லதிகாரம் 755-271 இயற்பெயர் முன்ன ராரைக் கிளவி பலர்க்குரி யெழுத்தின் வினையொடு முடிமே. EE தெய்வக் அடுத்த நூற்பாவையும் இத்துடன் இணைத்து ஒரே தத்திரமாகக் கொள்வார். சுப்பிர, "அவ்வாறு கூறின் வாக்கியபேதம் வருமாதலின் அது பொருந்தாது" என்பார். (பதிப்பு 21 பக். 151) 756-272 அசைநிலைக் கிளவி யாகுவழி யறிதல். 23 அடிகள் "விளக்கம் என்பதும் இலக்கம் என்பதும் உரிச்சொற் பொருளா யிருத்தலின் 'எல்லே விளக்கும்' என்று பாடம் இருக்கலாமோ என்று அறிஞர் கருதுகின்றனர்" (பதிப்பு 76 பக். 823) என்கிறார். ஆனால் அவ்வாறு கருதுபவர் யார் எனச் சுட்ட வில்லை. ■ எல்லே இலக்கம் எனப் பாடங் கொண்ட பால. தம் காண்டிகையில் (பதிப்பு 78), "இலக்கம் என்பது இலங்குதல். விளங்குதல், துலங்குதல் என்னும் பண்பு குறியாது. தொழிற்குறிப்புணர்த்தி நிற்றலின் இடைச்சொல்லாயிற்று எண்க ... சேனா, இலக்கம் என்பதற்கு விளங்கித் தோன்றுதல் என்னும் பண்புப் பொருள் கொண்டு உரிச்சொல் நீர்மைத்து என்றார். வளைகள் அசைந்து இலங்கும் நிலைமையைச் சுட்டுதற்கண் அஃது. இடைச்சொற் குறிப்பாதல் நோக்கி ஆசிரியர் இடையியலுள் வைத்தாரென அறிக. இவ் விடைச்சொல்லின் பொருண்மை ஒராமல் எல்லே இயக்கம் எனவும். எல்லே விளக்கம் எனவும் பாடங்கொண்டு உரை கூறுவாரும் உளர். இவை பாடமாயின் அஃது உரிச்சொல்லேயா மென்க. "என்று எழுதியுள்ளார். வெள்ளைவாரணனார். "இடைச்சொல் உரிச்சொல் என்னும் பகுப்பினை நுனித்துணர்ந்து இலக்கணநூல் செய்த தொல்காப்பியர். இலக்கம் எனப் பொருள்படும் எல் என்னும் லகரவீற்று உரிச்சொல்லை இடையியலிற் கூறியிருத்தல் இயலாது என்பதும், இரங்குதற் பொருட்டாகிய எல்லே என்னும் ஏகார வீற்று இடைச் சொல்லையே ஆசிரியர் இவ்வியலிற் கூறியிருத்தல் வேண்டும் என்பதும், எல்லே இரக்கம் எனத் தொல்காப்பியர் கூறிய சூத்திரத்தில் ரகரத்தை லகரமாகக் கொண்ட பிறழ்ச்சியே இம் மாற்றத்திற்குக் காரணம் என்பதும் காலஞ்சென்ற இலக்கணக் கடலனாராகிய அரசஞ் சண்முகனார் ஆராய்ந்து கண்ட உண்மையாகும். " எனக் கூறித் தேவாரம் (8-453) திருப்பாவை (15) நாச்சியார் திருமொழி (3.3) ஆகிய இலக்கியச் சான்றுகளையும் காட்டுகிறார். இலக்கம். விளக்கம் இரண்டிற்கும் இந்த இடத்திலும், இயக்கம் என்பதற்குச் செய்யுளியலிலும் சுவடிச் சான்றுகள் உள்ளன. வேறு பாடங்களுக்கு இல்லை. அரசஞ் சண்முகனாரின் கருத்து ஏனையோரினும் சிறந்திருப்பினும் தக்க சான்றுகள் கிட்டும். வரை மூலபாடமாகக் கொள்ள இயலாது. ப.வெ.நா.