பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணையியல் I 57 957–10 எற்பாடு நெய்த லாதன் மெய்பெறத் தோன்றும்'. IO பரிவே. 1. மருத மெற்பாடு - சுவடி 73, 115 பதிப்புகள் 2,7 எற்பாடு நெய்தன் மெய்பெறத் தோன்றும் - சுவடி 108. 958–11 நடுவுநிலைத் திணையே நண்பகல்' வேனிலொடு o 畢 轟,■ = o 疆 முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே. II பா.வே. I. நண்பகல்’ - சுவடி 1, 9, 16, 34, 53, 73, 74, 115, 481, 502, 10:54, 1066 பதிப்பு 2. இத்தனை இடங்களிலும் எழுத்துப்பிழை எனக் கூறுதல் பொருந்தாது. நன்பகல் என்ற ஆட்சியும் உண்டு. 2. முடியுநிலை - சுவடி 106, 106A 1066 3. முன்னியல் - சுவடி 106, 108A பிழை லகரமெய் மிகை. + முன்பகல் தமைக்கூடி நன்பகல் அவனித்துப் பின்பகல் பிறர்த்தேரு நெஞ்சமும் ஏமுற்றாய் என்பது மருதக்கலி 10-11 (கலித். 74) இதிற் பயின்ற நன்பகல் என்றதற்கு இ.வை.அ. தந்துள்ள குறிப்பு வருமாறு: "உச்சிப்பொழு தென்னும் பொருளில் நண்பகலென்பதேயன்றி நன்பகலென்பதும் வருமென்பதை நன்பகலந்தி (பொருந. 45) நன்பகலுங் கூகை நகும் (பு.வே.மா. வஞ்சி 4) என்புழி நன்பகல் என்பதற் கெழுதப் பெற்றிருக்கும் உரையும், பைங்கருங் காவிச் செங்கனி யளைஇ. நன்பகற் கமைந்த வந்துவர்க் காயும். ........ (பெருங்கதை 14: 81.92) என்று வரும் பகுதியும் வலியுறுத்தும். இங்ங்ணம் இச்சொல் பயின்றுள்ளமையின் ஏடெழுதுவோர் இப்பயிற்சியான் நன்பகலென் றெழுதினராதல் வேண்டும். (கலித். பக். 445) நண்பகல் என்பதே பெரும்பான்மையான ஆட்சி. இதன்பயிற்சி மிகுதியால் நன்பகல் என வருமிடத்தில் நண்பகல் என எழுதிவிடுதல் இயற்கையாகுமேயன்றி. மிக அருகிய வழக்கான நன்பகலின் நினைவால் நண்பகலை மாற்றுதல் என்பது அத்துணைப் பொருத்தமானதாகத் தோன்றவில்லை. நள்+பகல்=நண்பகல், செறிந்த பகல் என வருவதைப்போலப் பகலின் நலங்கள் நிறைந்த பொழுது என்னும் பொருளில் நன்பகல் என வழங்கப்படலாம். (நெடுநல்வாடை என்பதுபோல) பல சுவடிகளிலும் இந்நூற்பாவில் நன்பகல் என்னும் பாடம் காணக் கிடைப்பதால் இதுவும் ஆய்விற்குரிய நல்லதொரு பாடமாகக் கொள்ளல் தகும். ப.வெ.நா.