பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XX ஆதலின் ஒரு சூத்திரத்தில் ஒரு உத்தேசியமும், ஒரு விதேயமுமே இருத்தல் வேண்டும். இவ்வாறு ஆத்திரிப்பதின் பயன் சூத்திரத்தின் பொருள் கேட்போனுக்கு இனிது விளங்கும் என்பதே" என்பர் (மேலது. பக். 238, 239) (எதனைப் பற்றி விதிக்கப்படுகிறதோ அது உத்தேசியம் ஆகும். வாக்கியத்தில் பெரும்பாலும் அது எழுவாயாக இருக்கும். எது விதிக்கப்படுவதோ அது விதேயம் எனப்படும்.) ஒா உரையாசிரியர் இரண்டு அல்லது மூன்றாகக் கொண்ட நூற்பாக்களை மற்றொருவர் இணைத்து ஒரே சூத்திரமாகக் கொண்டுள்ளதைத் தொல்காப்பிய உரைகளிற் காணமுடிகிறது. இவ்வுரையாசிரியர்கள் அனைவரும் வடமொழியறிவும் நிரம்பியவ ர்களே. இவ்வுரையாசிரியர்களுடைய செயலைக் காணும்போது வாக்கிய பேதம் என்னும் குற்றததைத தமிழில் பார்க்க வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. இது தொடர்பாகத தி.வே.கோ. எழுதியது பின்வருமாறு. "சூத்திரம ஒரே பொருளைக் குறித்தல் வேண்டும் என்பதற்கு விதி, "ஒரு பொருள் துதலிய சூத்திரத தானும்" என்பது "உருஉட்காகும். புரையுயர்பாகும்" இரண்டும் குறிபபுப் பொருளில் வருதலாகிய ஒரே பொருள் நுதலுவதனால் இணைத்துக் கூறப்பட்டன. பிறிது சிறி தேற்றலும் உருபுதொக வருதலும் வழுவமைதியாதல் ஒப்புமையால் ஒரு பொருளாகக் கொண்டு சூத்திரமியற்றப்பட்டது. லனவென வரூஉம் புள்ளி முன்னர் 150) என இரண்டை இணைத்துக் கூறியது புணர்ச்சி. ஒரு தன்மைத் தாத்ல் என்ற ஒரு பொருள் பற்றியேயாம். கொண்டுதலைக் கழிதலும் (964) என்பதன் கண் பாலைககண் குறிஞ்சியும் நெய்தலும் மயங்கியமை பற்றி ஒரே நூற்பாவில் இடம் பெற்றன. யாதானு மோரியைபுபற்றி இரண்டு முதலிய செய்திகளை இணைத்துக் கூறுதலால் ஒரு பொருள் நுதலியமை உணரப்படும்." தொல்காப்பியரின் அசைக்கோட்பாடு தொல்காப்பியர் செய்யுளின் அடிப்படை அலகான அசைகளை நேர், நிறை. நேர்பு நிரைபு என நான்காகக் கொண்டார். நேர் நிரைகளைச் சார்ந்து உகரமேறிய உயிர்மெய்வரின் அவை முறையே நேர்பு நிரைபு எனப்படும். (காது. பாட்டு, என்பன நேர்பு, வரகு, அரக்கு. மலாடு, உராய்வு என்பன நிரைபசைகளாம்.) ஆனால் காக்கைபாடினியார் முதலிய ஒருசார் யாப்பியலறிஞர்கள் இந்நேர்பு நிரைபு அசைகளை ஏறகாமல் அவறறைத் தேமா, புளிமா என்னும் ஈரசையாகவே கொண்டனர். தொல்காபபிய உரையாசிரியர்களும் தொல்காப்பியரின் கருததையே ஏற்று நேர்பு நிரையை ஒரசையாகவே கூறிச்சென்றனர். எழுத்து (29). கிளந்து (102), திரிந்து (130) உருபு (1.33) என்பன போலத் தொல்காப்பியத்தில் பல இடங்களில் நிரைபசைகள் பயின்று வருகின்றன. இவ்விட ங்களில் எல்லாம் நூற்பா ஓசை குறைதலையும் காண்கிறோம்.