பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் 237 1074-127 ”ஆய்பெருஞ் சிறப்பி னருமறை கிளத்தலிற் றாயெனப் படுவாள்' செவிலி யாகும். 34 பா.வே. 1. படுவோள் - நச்சர். பால. பாடம். 1975-128 தோழி தானே செவிலி மகளே. 35 1078-129 சூழ்தலு தசாத்துணை நிலைமையிற் பொலிமே. 36 1077-130 குறையற வுணர்தன் முன்னுற வுணர்தல் H இருவரு முள்வுமி யவன்வர வுணர்தலென மதியுடம் படுத லொருமூ வகைத்தே. 37 பா.வே. 1. படுத்த - நச்சர். பாடம். 1078-131 அன்ன வகையா னுணர்ந்தபின்' னல்லது பின்னிலை முயற்சி பெறானென' மொழிப. 38 ஆர்.வே. 1. லுணர்ந்தபின் - சுவடி 9, 53, 73, 502, 1054 வெள்ளைப்பாடம். 2. பெறாளென" - இளம்பூரணர் பாடம். + "இது முதலாய மூன்று சூத்திரங்களும் பொருளியலுள் கூறற்குரியவை. எனினும் செவிலியுந் தோழியும் இன்றியமையாச் சிறப்புடையவராய் அறத்தொடு நின்று கள வினை வெளிப்படுத்தித் தலைமக்களைக் கற்பின்கண் செலுத்தும் கிழமையுடையராகத் திகழும் இயைபு நோக்கி ஈண்டுக் கூறப்பெற்றன." பால. (பதிப்பு 83 பக். 104) அச்சுநூல்கள் அனைத்திலும் குறையுற வுணர்தல் என்றே மூலபாடம் இருப்பினும் இளம்பூரணர். "அவன் குறையுறாவழித் தலைவி குறிப்புக்கண்டு உணர்தலும்" எனப் பொருள் கூறுவதால் அவர் கொண்ட பாடம் குறையறவுணர்தல் என்பதே எனத் தெரிகிறது. குறையுற எனப்பாடங் கொண்ட நச்சரும் பாலவும் முறையே "தலைவன் தோழியை இரந்து குறையுற்ற வழி உணர்தல்' என்றும் தலைவன் தன்பால் வந்து இரந்து குறையுறுதலான் களவொழுக்கத்தை உணர்தலும்" என்றும் கூறுதல் காண்க. ப.வெ.தா. இச்சூத்திரம் தோழிக்குரியதொரு திறன் உணர்த்துதல் நுதலிற்று எனக்கொண்ட இளம் பூரணர் பெறாள் எனப்பாடங் கொண்டு. "இருவர் மாட்டும் அன்புடைமை உணர்ந்த பின் அல்லது வழிபாட்டு நிலைமையாற் கூட்டத்திற்கு முயலப்பெறாள் தோழி" எனப்பொருள் உரைக்கிறார். *