பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 பொருளதிகாரம் சென்ற தேஎத் துழப்புநனி விளக்கி(ய்) இன்றிச் சென்ற தன்னிலை’ கிளப்பினும் அருந்தொழின் முடித்த செம்மற் காலை விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும் மாலை யேந்திய பெண்டிரு மக்களுங் கேளி ரொழுக்கத்துப் புகற்சிக்" கண்ணும் ஏனைய வாயிலோ ரெதிரொடு' தொகைஇப்" ■ - H.T - - பண்ணமை பகுதிப்" பதினொரு மூன்றும் எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன. 5 பா.வே. 1. ரிைலைஇய - பதிப்பு 22 2. டளைஇயச் - பதிப்பு 22 3. எனது - பதிப்புகள் 2, 7 அச்சுப்பிழை ஆகலாம். 4. அமுதம் - நச்சர். பாடம். 5. தொடுதற் - நச்சர். பால. பாடம் 6. தேஎத்தினும் - சுவடி 115. பிழை. பொருந்தாப்பாடம். 7. வருளிய - நச்சர். பாடம். 8. புதல்வர்ப் - பதிப்பு 8.3 மூலத்தில் இவ்வாறு பன்மைப் பாடம் காணப்பட்ட போதினும் உரைப்பகுதியில் புதல்வற் எனச் சரியான பாடமே உள்ளது. எனவே மூலபாடம் அச்சுப்பிழை என்க. + 9. புனிறுசேர் - நச்சர். பாடம் புனிறு தேர் - பதிப்பு 34இல் சு.வே. பொருந்தாப்பாடம். + "புதல்வற் பயந்த புனிறுதீர் பொழுதின்" (புத்தகத்தில் பசந்த என்பது அச்சுப்பிழை) என்ற தொடரில் புனிறுதீர் பொழுது எனப் பாடங் கொண்டார் இளம்பூரணர். நெய்யணி மயக்கத்தைப் புரிந்தவளாகிய தலைவி என்று பொருள் கொண்டால் புனிறுதிர் பொழுது என்ற இளம்பூரணர் பாடம் பொருந்தும். ஆனால் நச்சர். 'எண்ணெயாடும் மயக்கத்தை விரும்பிய தலைவி எனப் பொருள் கொண்டு அதற்கு ஏற்பப் புனிறுசேர் பொழுதின் எனப் பாடங் கொண்டுள்ளது சிறப்பாக உள்ளது. புனிறுதேர் பொழுதின் எனப்பதிப்பில் அமைந்த பாடம் அத்துணைச் சிறப்புடையதன்று' வெ.ப. (பக். 205)