பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 1437-490 நிறைமொழி மாந்த ராணையிற் கிளந்த' மறைமொழி தானே மந்திர மென்ப. பா.வே. 1. கிளக்கும்-இளம்பூரணர் பாடம். 1438-491 எழுத்தொடுஞ் சொல்லொடும் புணரா தாகிப் பொருட்புறத் ததுவே குறிப்பு மொழியே." பா.வே. 1. தாகிய-பதிப்பு 74 அச்சுப்பிழை. 2. குறிப்பு:மொழி யென்ப-பேரா. நச்சர். பால. பாடம். 1439-492 பாட்டிடைக் கலந்த பொருள வாகிப் பாட்டி னியல பண்ணத்தி யியல்பே.' சுவடி 115இல் பண்ணத் தீயே எனப் பாடங்கொண்டு, அடுத்த நூற்பாவையும் சேர்த்து ஒரே நூற்பாவாகக் கொள்ளப்பட்டுள்ளது. பா.வே. 1. பண்ணத் திய்யே-இளம்பூரணர் பாடம். பண்ணத் தியே-சுவடி 73.115.575 பிழை, யகர மெய் விடுபட்டது. 1440-493 அதுவே தானும் பிசியொடு மானும். 1441-494 அடிநிமிர் கிளவி யீரா றாகும்". 3.29 I75 I75 177 I75 179 இதனை அடுத்ததுடன் இணைத்து ஒரே நூற்பாவாக இளம்பூரணர் கொண்டுள்ளார். பால இந் நூற்பாவிற்கு அடிநிமிர்பு கிளக்கின் ஈரா றாகும் எனப் பாடங் கொண்டு கூறுவதாவது "இச் சூத்திர பாடம் அடிநிமிர் கிளவி என உளது. அடிநிமிர்பு கிளக்கின் என்பதே உண்மையான பாடம் என்பது பேரா.உரையான் அறியக் கிடக்கின்றது. அவ்வுரையாவது: "அப்பண்ணத்தியின் அடிப்பெருக்கங் கிளக்குங்கால் பன்னிரண்டாம் என்பது. இங்கனம் உரைநோக்காது தவறாக அச்சிடப்பெற்றுள்ள சூத்திரங்கள் சில உள."(பதிப்பு 89 பக்.149) தொடர்ச்சி அடுத்த பக்கம்,