பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 1481-534 சித்திர வண்ணம் நெடியவுங் குறியவு நேர்ந்துடன் வருமே." பா.வே. 1. வரூஉம்-நச்சர். பாடம். 1482-535 நலிபு வண்ண மாய்தம் பயிலும். 1483-536 அகப்பாட்டு வண்ணம் முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே. பா.வே. 1. முடித்தன்-பதிப்பு 70 இல் சு.வே. 1484-537 புறப்பாட்டு வண்ணம் முடிந்தது போன்று முடியா தாகும். பா.வே. 1. முடிந்த தொன்று-பதிப்பு 70 இல் சு.வே. 1485–538 ஒழுகு' வண்ண மோசையி னொழுகும். பா.வே. 1. ஒழுகும்-சுவடி 16 பால.பாடம். 1486-539 ஒரூஉ வண்ண மொரீஇத் தொடுக்கும்.

  1. To

பா. ர்பெ.

1. மொரூஉத்தொடை-இளம்பூரணர். பால. பாடம். 1487-540 எண்ணு வண்ண மெண்ணுப் பயிலும். 1488-541 அகைப்பு வண்ண மறுத்தறுத் தொழுகும். 1489-542 துங்கல் வண்ணம் வஞ்சி பயிலும். J&P 2.19 220 221 222 223 224 2.25 226 227