பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

357 பிற்சேர்க்கை:1 தொல்காப்பியரையும் நூலையும் போற்றும் பழம் பாடல்கள் ஆனாப் பெருமை அகத்தியன் என்னும் அருந்தவ முனிவன் ஆக்கிய முதல் நூல் பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும் பன்னிரு படலம். (பெருந்தொகை 1387) கூறிய குன்றினும் முதல்நூல் கூட்டித் தோம்இன் றுணர்தல் தொல்காப் பியன்றன் ஆணையின் தமிழிறிந் தோர்க்குக் கடனே. (பெருந்தொகை 1388) தொல்காப் பியப்புலவர் தோன்ற விரித்துரைத்தார் பல்காய னார்வகுத்துப் பன்னினார் - நல்யாப்புக் கற்றார் மதிக்குங் கலைக்காக்கை பாடினியார் சொற்றார்தம் நூலுள் தொகுத்து. (பெருந்தொகை 1389) மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை இருந்த சீர்சால் முனிவரன் தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன் புறப்பொருள் வெண்பாமாலை - சிறப்புப்பாயிரம் ஒல்காப் பெருமைத் தொல்காப் பியனார் மயிலை நாதர் - நன்னூல் உரை நூற்பா 130 பல்காற் பழகினுந் தெரியா உளவேல் தொல்காப் பியந்திரு வள்ளுவர் கோவையா