பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 மூன்றினும் முழங்கும் ஆண்டினும் இலையேல் வடமொழி வெளிபெற வழங்கும் என்க. சாமிநாத தேசிகர் - இலக்கணக் கொத்து - பாயிரம். 7. ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியனடி பல்காற் பரவுதும் எழுத்தொடு சொல்கா மருபொருள் தொகைநிகழ் பொருட்டே. ஒரு சுவடிக் காப்பு. பிற்சேர்க்கை:2 நூலின் அமைப்பைப் பற்றிய பழைய பாடல்கள் (பாடியோர் பெயரும் காலமும் அறியப் பெறாதவை) (வெண்பாக்கள்) நூலின் மரபு மொழிமரபு நுண்பிறப்பு மேலைப் புணர்ச்சி தொகைமரபு - பாலாம் உருபியலின் பின்னுயிர் புள்ளி மயக்கம் தெரிவரிய குற்றுகரம் செப்பு. (1990) எழுத்ததிகார நூற்பாத் தொகை எழுத்தி காரத்துச் சூத்திரங்க ளெல்லாம் ஒழுக்கிய வொன்பதோத் துள்ளும் - வழுக்கின்றி நானூற் றிருநாற்பான் மூன்றென்று நாவலர்கள் மேனுாற்று வைத்தார் விரித்து. (1991) சொல்லதிகாரத்தின் இயல்வரிசை கிளவியாக் கம்மே கிளர்வேற் றுமைசொல் உளவேற் றுமைமயக்க மோங்கும் - விளிமரபு தேற்றும் பெயர்வினைக் சொல் சேரும் இடையுரிச்சொல் தோற்றிய வெச்சவியல் சொல். (1992) பா.வே. 1. தோற்றியிடு மெச்சவியற் - சுவடி எண் 73.