பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 பாடவேறுபாடுகள். இப்பழம் பாடல்களைத் திரு.மு. இராகவையங்கார் தம் பெருந்தொகையில் தொகுத்துள்ளார். இங்கே கொடுக்கப் பெற்றிருப்பவை அத்தொகுப்பின் தொடர் எண்கள் ஆகும். சொல்லதி காரத்துச் சூத்திரங்கள் எல்லாம் சொல்லிய ஒன்பான்ஒத் துள்ளுமே - சொல்லிய நானூற் றறுபத்து மூன்றிரண்டு நாவலவர் மேல்நூற்று வைத்தார் விரித்து. டாக்டர் உ.வே.சா. நூலகச் சுவடி 73இல் உள்ள வெண்பா. பிற்சேர்க்கை:3 பழைய தொல்காப்பியப் பதிப்புகளில் இடம் பெற்றுள்ள சிறப்புப் பாயிரக்கவிகள் கி.பி. 1858இன் தொல்காப்பிய - நன்னூல் பதிப்பிற்கு 1. புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் அவர்களின் சிறப்புப் பாயிரம் பூமிசை அகலா நான்முகத் தொருவன் படைப்புழி இன்சொலின் இயக்கம் தெரிப்பான் இருக்கையால் வாழியர் எனாமேல் நிறுவிய வேங்கடங் குமரி யோங்கிய மேல்கீழ்ப் புணரிது.ழ் வரைப்பில் அணவிய முத்தமிழ் ஆன்றதொல் கடலுள் தோன்றும் ஐம்ப்ொருள் ஈர்ஜஞ் நூற்றுச் சீர்.அமை பணமணிச் சூட்டருள் நெட்டுடற் கோட்டம்இல் பாப்பர(சு) ஏந்துபு கிடந்த மாண்(பு) அமை நீள்நிலத்(து) ஏவரும் உணராத் தாவரும் பயன்கொள IO உயிர்தொறுஞ் சிவணிய செயிர்அறு பொதுநடம் நவிலும் தனிமுதல் தவல்அருங் கைவலத்(து) அமிழிசை கதுவிய தமருகத்(து) எழும்ஏழ்