பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

375 ஈர்அறு சீடரும் இயல்வலர் ஆகச் சீருடன் ஒதினன் திகழ்தரும் அவருள் முதல்மா ணவன்என முந்நீர் உலகம் இதமொடு புகல இனிதுவிற் றிருந்(து) அங்(கு) ஒல்காப் பெரும்புகழ் உற்றுமீ(து) ஓங்கிய தொல்காப் பியமுனி துலங்குதன் பெயரின் 2O இயற்றிய தொல்காப் பியம்எனும் ஒருநூல் நயத்தகும் அளவையாய் நண்ணுவது அன்றியும் கோவை யார்திருக் குறள்சிந் தாமணி தேஇயற் சங்கச் செய்யுள்கள் ஆதி இலக்கி யங்களுக்(கு) இலக்கணம் ஆகியும் புலப்படு மூலமும், புகல்அதற்(கு) இணங்க உச்சிமேற் புலவர் உவந்துகொள் தெய்வ நச்சினார்க் கினியர்செய் நல்உரை அதுவும் கரலிகி தங்களில் காணுறு பிழையினைச் சரதமொ(டு) உணர்ந்து சால்பு(உ)றத் திருத்தி 30 அச்சில் பதிப்பித்(து) அருளுக என்றே இச்சித்(து) உணர்வுடை யோர்சிலர் இயம்பலின் விழுப்பமொ(டு) உலகில் மேவுற விளங்க எழுத்ததி காரத்(து) இயல்ஒன் பானும் காண்டகும் அச்சில் கலப்புறச் செய்தனன் - மாண்தரு தாமரை மலர்ஆ திகளின் புதுமணம் பரப்பிப் புறந்திரிந்(து) அயரும் மதுகரத் தொகுதியை வருகெனப் பணித்துத் தாது(உ)று கமலத் தண்நற(வு) அருத்தித் திதறு பகலில் செவ்விதிற் புரந்து 40 நள்ளிருஞ் பொழுது நண்ணிய காலைக் கொள்ளைகொள் குமுத மலர்த்தேன் குடிப்பித்(து) உவர்க்கடற் புவியின் உறும்இர வலரை நிவப்பு(உ)று புகழ்எனும் நேரிழை தன்னைத் து.ா(து) என விடுத்துத் தொக்கு(உ)ற விளித்(து) அங்(கு)