பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 எழுத்ததிகாரம் 125. அத்தி னகர மகரமுனை யில்லை. 2.3 127. இக்கி னிகர மிகரமுனை யற்றே. 24 128. ஐயின் முன்னரு மவ்விய னிலையும்'. 25 பா.வே. 1. நிலையும் - சுவடி 1053 சந்திப்பிழை 129 எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழிய்" அக்கின் இறுதிமெய் மிசையொடுங் கெடுமே குற்றிய லுகர முற்றத் தோன்றாது. ፵ S பா.வே. 1. வரும்வழி - சுவடி 115 2. மெய்ம்மிசை - பதிப்புகள் 1, 5, 14, 17 மெய் மிசையொடும் கெடும் என எழுவாய்த் தொடர். எனவே மகரம் இரட்டாது. 3. முற்றித் - சுவடி 1044 எழுத்துப்பிழை. ற > றி 130. அம்மி னிறுதி கசதக் காலைத் தன்மெய் திரிந்து ங்ஞந வாகும். 27 131. மென்மையு மிடைமையும்' வரூஉங் காலை(ய்) இன்மை வேண்டு மென்மனார் புலவர். 28 பா.வே. 1. மிடைமையு - சுவடி 73. பிழை, மகரமெய் விடுபட்டது. மிடையும் - பதிப்பு 47 இல் சு.வே. சிறப்பிலி. 132. இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற்கு) இன்னென் சாரியை யின்மை வேண்டும். 25 133. பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப வேற்றுமை யுருபு நிலைபெறு வழியுந் தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும்