பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முடிபுகளைக் கூறிப் பாராட்டப்பெற்றிருப்பவன் யான். இந்த அடிப்படை முன்னுரையுடன், தொல் திராவிட மொழியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றேன். இந்த நூலும் ஒருவகையில் மொழியியல் தொடர்பான நூல் ஆதலின், மேலே இவ்வளவு கூற வேண்டியதாயிற்று. அறிஞர்கள் ஆய்க.

இந்நூலுக்குத் தக்க அணிந்துரை நல்கிய திரு.ச அறவணனுக்கும், நூலை நன் முறையில் விரைந்து அச்சிட்டுத் தந்த கே.பி.டி. அச்சகத்தாருக்கும் எனது நன்றி மிகவும் உரித்து.

சுந்தர சண்முகன்
30-11-1988