பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 உண்டு. மாடு என்பதற்குச் செல்வம் என்னும் பொருள் உள்ளமையை, 'கோடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடுஅல்ல மற்றை யவை” (400) என்னும் திருக்குறள் பா அறிவிக்கிறது. கல்வியே செல்வம் மற்றையவை மாடு(செல்வம்) ஆகா - என்பது பொருள் தன் சொல்லுக்குத் தானே பொருள் கூறும் பாடல் இது. ஐயர் குலத்தினர், தம் வீட்டிற்கு வரும் மருமகளை 'மாட்டுப் பெண்’ என்று கூறும் வழக்காறும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. மாடு என்பதற்குப் பக்கம் என்னும் பொருளும் உண்டு, வீட்டில் பிறந்த பெண் வேறு வீட்டுக் டுக்குப் போய் விடுவதாலும் மருமகள் தம் பக்கத்திலேயே இருப்பதாலும் மாமியார் வீட்டார் மருமகளை மாட்டுப் பெண் என்று அழைப்பதாகச் சிலர் பொருள் கூறுகின்ற னர். இது சரியன்று. மருமகளை வீட்டிற்கு வந்த திருமகள் (இலட்சுமி) என்று சொல்வது மரபு. மருமகள் வீட்டிற்குச் செல்வம் ஆவாள்; மேலும் சீர்வரிசைச் செல்வம் (சீதனம்) கொண்டு வருகிறாள். இதற்கேற்ப, மாடு என்பதற்குச் சீதனம் (பெண்சீர்) என்னும் பொருளும் உண்டு என அகராதி நிகண்டு கூறுகிறது. எனவே. மாட்டுப் பெண் என்றால், செல்வப் பெண் என்றே பொருள் கூறல் வேண் டும். ஐயர்கள் ஆத்திலே (அகத்திலே), அம்மாஞ்சி (அம் மான் சேய்) என்றெல்லாம் நல்ல தமிழ்ப் பெயர்களை வழங்குவதை அறியலாம். அவற்றுள் மாடு என்பதும் ஒன் றாகும். இலத்தின் மொழியில் (Pecunia) என்னும் சொல்லுக்கு மாடு, செல்வம் என்னும் இரு பொருள் உள்ளமையும்