பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 தா,தை - ந,நா,நை - ப,பா,பை-ம,மா,மை - ய,யா,யை ர,ரா,ரை-ல,லா,லை - வ,வா,வை-ழ,ழா,ழை-ள,ளாளை - ற,றா,றை - ன,னா,னை என்னும் எழுத்துகளுள் ஏதா வது ஒன்று இருப்பின், மொழி முதலில் உள்ள இ’ என் பது 'எ' எனத் திரியும். இது கொச்சைப் பேச்சு உருவமா கும். இதற்கு எடுத்துக்காட்டுகள் வருமாறு: இரங்கு-எறங்கு, இறால்-எறால். இலை-எல; கிழவன்கெழவன்,-கிடா - கெடா-கிளை - கெள; சிரங்கு-செரங்கு, சிணாறு - செணாறு, சிலை - செல; திற.தெற, திடாரிக் கம்-தெடரிக்கம், திரை - தெர; நிலம்-நெலம், நிலா - நெலா, நினைப்பு-நெனப்பு; பிசகு-பெசகு, பிலாக்கு - பெலாக்கு, பிழை-பெழ; மிதப்பு - மெதப்பு, மிலாறு - மெலாறு, மிகை.மெக (கை); விறகு-வெறகு, விளக்குவெளக்கு, விலா - வெலா விலை - வெல- முதலியன. பேச்சு வழக்கில் உள்ள சொற்களே இவ்வாறு திரியும். இன்னும் இவ்வாறு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு. வெளக்கு விளக்காயிற்றெனின், வெறகு விறகா யிருக்கவேண்டும் - நெலம் நிலமாயிருக்க வேண்டும் - கெழவன் கிழவனாயிருக்கவேண்டும். இவ்வாறு எத்தனைச் சொற்கட்கு அணை போடுவது? எனவே, இத்தகைய இடங்களில் இகரமே எகரமாகும். எகரம் இகரம் ஆகாது - என்பது முற்ற முடிந்த துணிபு. ஆகவே, வெளக்கு விளக்கு ஆகவில்லை; விளக்குதான் வெளக்கு ஆயிற்று என்பது எனது துணிவான தீர்ப்பு. இவ்வாறெல்லாம் அடிச்சொல் (வேர்ச்சொல்) கண்டு சொல்லாய்வு செய்யும் மொழியியல் பெருமக்கள் தம் போக்கை மறு ஆய்வு செய்யும்படி பணி வுடன் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.