பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 டும் கொச்சை வழக்காறுகளைக் கொண்டும், மலையாளத் திலிருந்தே தமிழ் வந்தது என்று கூறுவது பொருந்தாது. துடவமொழி எனவே, பொது உண்மையை மறுக்கும் அளவுக்கு -மறைக்கும் அளவுக்கு ஆராய்ச்சி இருத்தலாகாது. அவ ரவர்க்கும் தத்தம் தாய் மொழிப் பற்று இருப்பது உண் மையே. இதற்கு எடுத்துக் காட்டாக ஒரு சான்று தரு வேன்: நான் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தொகுப்பியல் துறைத் தலைவனாகப் பணியாற்றியபோது பல்கலைக் சுழகப் பேரவை (செனட்) உறுப்பினனாகவும் இருந்தேன். அப்போது, துடவம் (தோடம்) என்னும் ஒரு திராவிடமொழி பேசும் மலைவாழ் மக்களாகிய தோடர் வகுப்பைச் சேர்ந்த ஒர் அம்மையார் (அந்த வகுப்புதான் என்று எண்ணுகிறேன்) மிக்க கல்வி பெற்றுத் தக்க அலு வலராயிருந்தமையால், செனட்’ பேரவையில் அன்னாரும் ஒர் உறுப்பினராய் அமர்த்தப்பட்டிருந்தார். ஒருநாள் 'செனட் பேரவை கூடியபோது, அந்த அம்மையார், தங் கள் மொழிக்கு எழுத்து கண்டுபிடித்து-புதிதாகப் படைத் துத் தரும்படி கேட்டுக் கொண்டார். அந்த அம்மையா ரிடம் யான் பின்வருமாறு கூறினேன்: “ஐரோப்பிய மொழிகளிலும் அமெரிக்க மொழிகளி லும் பெரும்பாலன ரோமன் எழுத்துகள்’ எனப்படும் இலத் தீன் மொழி எழுத்துகளால் எழுதப்படுகின்றன. ஆப்பிரிக்க மொழிகள் சிலவும் அவ்வாறே எழுதப்படுகின்றன. இந்தி. மராத்தி, நேபாளி முதலிய வடக்கு மொழிகள் தேவநாகரி என்னும் சமசுகிருத எழுத்துகளால் எழுதப் படுகின்றன. அது போலவே, நீங்களும், தமிழோடு ஒத்த திராவிட மொழியாகிய உங்கள் மொழியைத் தமிழ்எழுத்து களால் எழுதலாமே ; இதற்காகப் புதிய எழுத்துகள்