பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 கண்டுபிடித்துப்படைக்கும்தொல்லைவேண்டியதில்லையே” என்று கூறினேன். அதற்கு அந்த அம்மையார் ஒத்துக் கொள்ளவில்லை. தமது தாய் மொழிக்குத் தனியே வேறு எழுத்துகள் படைக்கப்படவேண்டும் என வலியுறுத்தி னார்கள். பாருங்கள்! எழுத்தே யில்லாத - மிகவும் பின்தங்கிய அந்த மொழியிடத்தும் அந்த அம்மையாருக்கு மிகுந்த பற்று இருப்பது பாராட்டத் தக்கதே. இதுபோல், மற்ற திராவிட மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டிருப் போர்க்கும் தத்தம் மொழி மீது பற்று இருப்பது உண் மையே-இருக்க வேண்டியது இன்றியமையாததே. ஆனால், தாழ்வு மனப் பான்மையுடன், எழுத்துத் தமிழைத் தொல் திராவிட மொழியாக ஏற்றுக் கொள்ளாவிடின் - ஒத்துக் கொள்ளாவிடின், இத்தகைய நிலை உண்மைக்குப் புறம் பானதே யாகும். மேலே தரப்பட்டுள்ள திராவிட மொழி களின் பட்டியலையும் என் விளக்கங்களையும் நடுநிலை யுடன் எண்ணி ஆய்ந்து நோக்கின் உண்மை புலனாகும்.