பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

துளுவம்:

துளுவம் என்னும் துளு மொழி, கருநாடக மாநிலத்தில் - தென் கன்னடம் என்னும் மாவட்டத்தில் உள்ள துளு நாடு என்னும் வட்டாரத்தில் பேசப் படுகிறது. இதைப் பேசுவோர் தொகை மிகக் குறைவே. இந்த மொழிக்கு எனத் தனி எழுத்து இல்லை. கி.பி. 19 ஆம் நூற்றாண்டுவரை இது மலையாள எழுத்தால் எழுதப்பட்டது. 1842 ஆம் ஆண்டில், 'பாசல் மிஷன் அச்சகத்தார்’ (Basel Mission Press) துளு மொழிக்குக் கன்ன எழுத்தைப் பயன்படுத்தினர். பிறகு இன்றுவரை கன்னட எழுத்தே நீடித்துப் பயன்படுத்தப் படுகிறது. மென்மையான இனிய பலாப் பழத்தை இம்மொழி மக்கள்'துளுவம் பழம்' என்கின்றனர். எனவே, துளுவம் என்பதற்கு இனிமை என்னும் பொருள் கூறலாம் என்று சொல்லப்படுகிறது.

மற்ற திராவிட மொழிகள்:

முன் சொல்லப் பட்டவை தவிர்த்த மற்ற திராவிட மொழிகள், சிறுபான்மையினரான மலைவாழ் மக்களாலும் போதிய வளர்ச்சி பெறாதவர்களாலும் ஆங்காங்கே பேசப்படுகின்றன. இவற்றுள் கவர் மொழி ஒரியா எழுத்தால் எழுதப்படுகிறது. துடவர், தோடர், கோண்டு, உராவன், மாலர், குடகு ஆகிய மொழிகள் ரோமன் (ஆங்கில) எழுத்தால் எழுதப்படுகின்றன. இவை திருத்தமும் வளர்ச்சியும் பெறவேண்டும். இனி, திராவிடமொழி கட்கிடையே உள்ள தொடர்பு குறித்துச் சிறிது ஆராயலாம்.

கிளை மொழிகள்:

எந்த மொழியும் எழுதப்படும்போது, அப்போது பேசப்படும் ஒலிவடிவமே எழுத்து (வரி) வடிவம் பெறும் என்று கூறலாம். இலத்தீன் மொழி முதல் முதலில் எழுதப்பட்ட