பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

பாகப் பயிலாமலேயே மொழியை வளர்க்க முடியும். மொழியியலார் மேற் கொண்டுள்ள சில செயல்களை மொழியியல் கல்லாதவரும் இயற்கையாக மேற்கொண்டு செய்து வருகின்றனர். தமிழ் M.A. பட்டம் பெற்றவர்க்கு மொழியியல் M.A. பட்டமோ அல்லது சான்றிதழோ இருந்துதான் தீரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

மொழியியலார் பழைய இலக்கணத்தை 'மரபு இலக்கணம்' என்னும் பெயரால் குறிப்பிடுகின்றனர். இவர்களின் மொழியியல் இலக்கணம் புதிய இலக்கணமாகும். தமிழ் மரபு இலக்கணத்தில் நூற்றுக் கணக்கான கலைச் சொற்கள் உள்ளன. அவை தமிழ்ச் சொற்களாகும். மொழியியலில் உள்ள கலைச்சொற்களோ ஆங்கிலச் (ஐரோப்பியச்) சொற்களாகும். இந்த ஆங்கிலச் சொற்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவையும் நூற்றுக் கணக்கில் உள்ளன.

மொழியியல் கற்றவர்கள், நூற்றுக் கணக்கான புதிய ஆங்கிலச் சொற்களையும் அவற்றிற்கு நேராகப் பெயர்க்கப்பட்ட தமிழ்ச் சொற்களையும் தேவையின்றிச் சுமந்து கொண்டுள்ளனர். தாம் கற்றுள்ள ஆங்கில-மொழியியலுக்குப் பொருந்து மாறு, தமிழ் இலக்கணத்தைத் தட்டிக் கொட்டி நீட்டியும் வளைத்தும் கருட்டியும் செதுக்கியும் குறைத்தும் இன்னும் என்ன எல்லாமோ செய்து கொண்டுள்ளனர். தலைப் பாகைக்கு ஏற்பத் தலையையும் மிதியடிக்கு ஏற்பக் காலையும் செதுக்கும் செயல்கள் சிலவும் நடை பெறுகின்றன. இரு தரத்தாருக் குள்ளும் கருத்து வேற்றுமை நிரம்ப உள்ளது.

வரலாற்றில் M.A. படித்தவர்க்குக் கணக்கு தெரியாதிருக்கலாம்; அவர் கணக்கு M.A. பயின்றுதான் தீரவேண்-