பக்கம்:தொழில் வளம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. முன்னுரை


இருபதாம் நூற்றாண்டு உலக வரலாற்றிலேயே சிறந்த ஒரு காலமாகும். எத்தனையோ நூற்றாண்டுக் காலங்களிலெல்லாம் காண முடியாத பலப்பல மாற்றங்களையும். முன்னேற்றங்களையும் இந்த நூற்றாண்டில் நம்மால் காணமுடிகிறது. நேற்றுப் புத்தம் புதியதாகப் போற்றப்பட்ட ஒன்று. இன்று மெத்தப் பழமையதாக மாறிவிடுகிறது. நாள்தோறும் புதுப்புது ஆராய்ச்சிகளும் விஞ்ஞான வளர்ச்சிகளும் பெருகிக்கொண்டே செல்கின்றன. மனிதன் தன் வாழ்வின் தேவைக்காக அமைத்துக் கொள்ள விரும்பும் சாதனங்களின் வழி அவனே நினைத்துப் பார்க்க முடியாத பல புதிய உண்மைகளைக் காண நேரிடுகிற்து. அந்த உண்மைகளை அவன் நோக்கும்போது அவனுக்கே சில வேளைகளில் மயக்கம் உண்டாகும். ஆம்! அவனே அவற்றின் நுண்மைக் கூறுபாடுகளை நினைத்தே இருக்கமாட்டான். அவனுக்குத் துணை செய்ய, அவன் வாழ்வை வளமாக்க எத்தனையோ புதுப்புதுத் துணைகளை அச்சாதனைகளின் மூலம் அவன் பெருக்கிக் கொள்ளுகிறான்; பெருக்கிக் கொண்டே போகிறான். அந்த விஞ்ஞான வளர்ச்சிகளும், சாதனைகளும் உண்மைகளும் அவனை விண்ணையும் ஏவல் கொள்ள வைக்கின்றன. அந்தச் சாதனைகளின் வழி அவன் சந்திரனை எட்டிப் பிடிக்கிறான். தங்குதடையின்றி எங்கும் உலவுகின்றான். விண்ணையும் மண்ணையும் எண்ணிட்டுக் கணக்குட்படுத்துகிறான். இவ்வாறு வளரும் இந்த நூற்றாண்டின் இடைக்காலத்தில் அவனது அன்றாடத் தேவைகள் பெருகுகின்றன. அவற்றை நிறைவிக்கப் பலப்பல கைத்தொழில்களைச் செய்கிறான் அவன். நாட்டில் - உலகில் - தொழிற் சாலைகள் பெருகுகின்றன. இந்த நூற்றாண்டை - சிறப்பாக இந்த இடைக்காலத்தை - வரலாற்று அறிஞர்கள் தொழில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/10&oldid=1381879" இலிருந்து மீள்விக்கப்பட்டது