பக்கம்:தொழில் வளம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

தொழில் வளம்


யுகம் என்பார்கள். நாமும் அந்த எல்லையில் அமைந்தே வாழ்கிறோம்.

தொழில் யுகம் (Industrial Age) என்று போற்றப்பெறும் இன்று உலகின் எல்லாப்பாகங்களிலும் எண்ணற்ற தொழிற் கூட்டங்கள் உருவாகி வருகின்றன; வளர்கின்றன. இதுவரையில் அடிமையாக இருந்த பல நாடுகள் உரிமை பெற்றுவிட்டன. எங்கோ இரண்டொரு சிறுநாடுகள் தவிர்த்து, இன்று உலகம் முழுதுமே உரிமை பெற்றுவிட்டது எனலாம். எனவே உரிமை நாடுகள் தமக்குள் போட்டி இட்டுத் தத்தம் தொழில் வளத்தைப் பெருக்கிக் கொள்ளுகின்றன. ஒரு சில உரிமை பெற்ற நாடுகள், முன்னமே தொழில் வளம் பெற்ற நாடுகளின் நிலையிலும் மேம்பட்டுத் தத்தம் தொழில் வளத்தை எல்லையில்லா வகையில் பெருக்கிக் கொண்டே செல்லுவதைக் கண் கூடாகவே காண்கின்றோம். அத்தகைய நாடுகளுள் நம் இந்தியாவும் ஒன்றாகும்.

இந்திய நாடு விடுதலை பெற்றும் பதினைந்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்தக் காலத்தில் இந்நாட்டில் பல்வேறு கைத்தொழில்கள் வளர்ந்துள்ளன. அந்நிய நாட்டு மூலதன உதவியாலும், தனியார் பொருளாலும் அரசாங்க உதவியாலும் பலப்பல தொழில்கள் நாட்டில் தோன்றி வளர்ந்து கொண்டே இருக்கின்றன. வடக்கே பக்ராநங்கல் தொடங்கித் தெற்கே பாபநாசம் வரையில் அமைக்கப் பெறும் பல்வேறு மின்சாரத் தோற்ற அமைப்புக்கள் நாட்டுத் தொழிலுக்கு உதவுகின்றன. இந்திய அரசாங்கத்தார் தொழில் வளர்க்கத்தக்க வழி துறைகளை ஆராய்ந்து, அதற்கென அறிவறிந்த வெளிநாட்டு வல்லுனர்களைக் கொணர்ந்து பல்வேறு பாகங்களில் பலப்பல தொழில்களை வளர்க்கின்றனர். தனித் துறையிலும் பலப்பல செல்வர்கள் தம்சொந்த முதலீடுகளைக் கொண்டும், கூட்டுறவு வழியிலும் வெளிநாட்டார் பொருள் உதவியாலும் பல்வேறு தொழிற் கூடங்களை அமைத்து நாட்டுத் தொழில் வளத்தைப் பெருக்கு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/11&oldid=1381915" இலிருந்து மீள்விக்கப்பட்டது