பக்கம்:தொழில் வளம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

9


கின்றார்கள். இவ்வாறு பல பெருந் தொழில்கள் வளர்ச்சி அடைவதோடு, எத்தனையோ சிறு தொழில்களும், குடிசைத் தொழில்களும் கூட அரசாங்கப் பொருள் உதவியாலும் தனியார் முயற்சியாலும் வளர்ந்து கொண்டே வருகின்றன; எனவே இத்தொழில் துறையில் இன்றைய நாட்டை அறிய வேண்டுவது அவசியமாகும்.

பரந்த பாரத நாட்டில் நம் தமிழ்நாடு ஒரு சிறு உறுப்பு நாடாக அமைந்துள்ளது. இதன் ஒவ்வொரு வளர்ச்சியும் பரந்த நாட்டின் பொது அமைப்பை ஒட்டியே செல்ல வேண்டியுள்ளது. இதன் ஏற்றமும் தாழ்வும் அவ்வரசாங்கப் பணிகளின் இடையிலேதான் அமைந்துள்ளன. எனவே இன்று தமிழ்நாடு எல்லாத் துறையிலும் முன்னேறுவதும் பின் தங்குவதும் இந்தியப் பேரரசின் செயல் வழியிலேயே அமைந்துள்ளன. அத்துடன் தமிழ்நாட்டு இயற்கை வளமும் ஓரளவு நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுகிறது எனலாம். இந்த இயற்கையின் நெறிவழியில் தான் நெய்வேலிப் பழுப்ப நிலக்கரியும் சேலம் இரும்பும், பல மின்சார நிலையங்களும் நாட்டை வளம்படுத்துகின்றன; வளம்படுத்த வழிகோல நிற்கின்றன. தமிழ்நாட்டின் பழங்காலப் பண்பாட்டைக் காட்டும் இலக்கிய இலக்கணங்கள் இந்நாட்டு மக்களின் உள்ளங்களால் உருவாகும் அக உலக வாழ்வை வளர்ப்பன போன்று, இயற்கை வளங்கள் புற உலக வாழ்வை வளர்க்க உதவுகின்றன. அவற்றுடன் தமிழர்கள் உள உரமும் உடல் உழைப்பும் கொள்ளத் தவறாதவர்கள். எங்கெங்கு உழைப்பும் உறுதியும் உண்டோ அங்கெல்லாம் தமிழரைக் காணலாம் என மேலை நாட்டுச் சமயப் போதகர் அறிஞர் கால்டுவெல் கூறியவாறு,[1] தமிழ் மக்கள் உழைப்புக்கு அஞ்சாதவர்கள். அவர்கள் பெற்ற சிறு வளத்தைக் கொண்டே தம் கைவண்ணத் திறனால் தம் நாட்டைப் பொன்னாடாக்குபவர்கள். இந்த நிலையில் அவர் தம் கை உழைப்புத் தமிழ்


  1. (Introduction. P. 7)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/12&oldid=1381917" இலிருந்து மீள்விக்கப்பட்டது