பக்கம்:தொழில் வளம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வளர்ச்சிக்குரிய அடிப்படைகள்

159


இவை தவிர சிமிட்டி உற்பத்திக்குத் தேவையான சுண்ணாம்புக் கல்லும் பிறவும் (Magnesite & Fireclay) கண்ணாடிக்கு வேண்டிய மூலமும், பாண்டங்கள் செய்யும் களி மண்ணும், வீடமைக்கும் செங்கல் மண்ணும் தமிழ் நாட்டில் உள்ள சிறந்த மூலப் பொருள்களாகும். கடல் வழிப்பெறும் பொருள்களின் மூலம், இராசயனத் தொழில்கள் வளர வாய்ப்பு உண்டு.

இந்த மூலப் பொருள்களைத் தவிரத் தொழில் வளர்ச்சிக்கு அடிப்படையான மக்கள் உழைப்பு தமிழ் நாட்டில் அதிகமாக உண்டு. பரந்த பாரத நாட்டிலும் அண்டை நாடுகளாகிய ஆந்திரம், கேரளம், கன்னட நாடுகளிலும் உள்ள பெருந்தொழில் நிலையங்களிலெல்லாம் பெரும்பாலான தமிழ் மக்கள் தொழிலாற்றுவதை நாடே அறியும், உயர்ந்த பொறியியல் வல்லுநர் தொடங்கிச் சாதாரண ஏழைத் தொழிலாளி வரை எண்ணற்ற வகையில் தமிழ் நாட்டு மக்கள் தொழிற்சாலைகளிலும் தொழிற் பேட்டைகளிலும் நாடெங்கும் பணியாற்றுகின்றனர். இலங்கை, பர்மா, மலேயா, தென் ஆப்பிரிக்கா முதலிய இடங்களிலிருந்து இன்று தமிழ் மக்கள் விரட்டப்படினும் அந்நாடுகளையெல்லாம் ‘காடு கொன்று நாடாக்கி’ வளம்படுத்திய பெருமை தமிழருக்கு உண்டு என்பதை யாரே மறுக்கவல்லார் ? அப்படியே ‘எங்கெங்குத் தொழில் உண்டோ அங்கங்கு அயராது அலுக்காது உழைப்போம்’ என்று உறுதிகொண்டு உழைக்கும் தமிழ் மக்கள் தம் சொந்த நாட்டிலே சோம்பி இருப்பார்களென்று எண்ண முடியுமா? மேல் வாரியாக நோக்கும்போது இன்றைய நிலையில் சோம்பித்திரியும் தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகமாகத் தெரிந்தாலும் வாய்ப்பும் வசதியும் இல்லாத காரணமே அவர்களை இந்த நிலைக்குக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/162&oldid=1382037" இலிருந்து மீள்விக்கப்பட்டது