பக்கம்:தொழில் வளம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வளர்ச்சிக்குரிய அடிப்படைகள்

161


எனவே, தமிழ்நாட்டு அரசாங்கத்துக்குத் தேவையான தொழிலுக்கு வேண்டிய அடிப்படை மூலதனம் கிடைக்கவில்லை. என்றாலும் தமிழ்நாட்டுச் செல்வர்கள் தேவைக்குமேலாக முன்னின்று பொருளைத் தொழில்துறையில் செலுத்தத் தயங்குவதில்லை. அனைத்திந்தியத் தொழில் வளர்ச்சி அடிப்படையில் பதினைந்தாண்டுகளுக்குச் (1956-71) சுமார் 2,000 கோடி ரூபாய் தமிழ் நாட்டுத் தொழில் வளர்ச்சிக்குத் தேவை என்று கணக்கிட்டுள்ளார்கள்.

அடிப்படை (பொதுவான 1:1 முறையில்) 200 கோடி
தொழில் (பெருந் தொழில்கள்) 500 ”
போக்குவரவு (சாலை, கப்பல், துறைமுகம் முதலியன) 350 “
மின்சாரம் (அனல், நீர்) 150 ”
பிற (வீடு, கல்வி, நலத்துறை முதலியன) 800 ”
2000 கோடி

கடைசியில் உள்ள பகுதியில் தொழில் வளத்துக்குரிய எல்லாத் தேவைகளும் அடக்கப் பெற்றுள்ளன. இந்திய அரசாங்கம் இரண்டாம் மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டங்களில் ஒதுக்கியுள்ள தொகையும் இனி இந்த அடிப்படையில் நான்காம் ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒதுக்கப் பெறும் தொகையும் இந்த அளவுக்குச் சரி செய்யுமா என எண்ணிப் பார்த்தால் முடியாது என்றே தோன்றும். ஆயினும், இதற்கு மேலாகத் தமிழ்காட்டுச் செல்வர்கள் தத்தம் பொருளை நாட்டுத் தொழில் வளம் பெருகும் வகையில் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் காண மகிழ்ச்சி பிறக்கிறது. பல்வேறு அரசாங்கக் கட்டுப்பாடுகளும் அரசியல் கட்சிகளின் இடையீடும் தொழில் சிக்கல்களும் தொழிலாளி முதலாளி வேறு-

11
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/164&oldid=1382194" இலிருந்து மீள்விக்கப்பட்டது