பக்கம்:தொழில் வளம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

தொழில் வளம்


பாட்டுணர்வு போன்றவையும் நாட்டில் இருந்த போதிலும் தமிழ் நாட்டுப் பெருஞ் செல்வர்கள் அக் குறைபாடுகளெல்லாம் மெல்ல மெல்ல நாட்டிலிருந்து மறையும் வகையில் திறம்படத் தொழில் நடத்தும் வகையில் தங்கள் பொருளைத் தொழில்வளர்ச்சியில் செலவிட்டுச் சிறந்த முறையில் நாட்டுக்கு உதவித் தாங்களும் சிறப்பெய்துகிறார்கள். இந்தியாவிலேயே தனியார் தொழில் துறைக்குச் செலவிடும் பகுதி தமிழ்நாடே என்று கணக்குச் சொல்லுகின்றது. அரசாங்கத்தாரே கடந்த இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் தனியார் துறைத்தொழிலே அதிகமாக வளர்ந்துள்ளது எனக் காட்டுவர். எனவே, பொருள், உழைப்பு, ஊக்கம் அனைத்தும் பிணைந்த காரணத்தால் ஒரு சில மூலப்பொருள் கிடைக்கவில்லை என்ற குறை மறைக்கப் பெற்று நல்ல தொழில் வளர நாட்டில் வாய்ப்பு இருக்கின்றது என்று நம்பலாம். அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழ் நாட்டு அரசாங்கத்தாரும் செல்வரும் உழைப்பாளிகளும் சேர்ந்து தமிழ்நாட்டைப் பன்மடங்கு வளரச் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் மேலே செல்லலாம்.

தொழில் வளத்துக்கு மற்றொரு அடிப்படை கல்வியாகும். கல்வி என்றபோது திருவள்ளுவர் காட்டும் கல்வியே எனக்கு நினைவிற்கு வருகின்றது. மேலும் பெறும் அறிவை வளர்ப்பதே கல்வி. ‘கற்றனைத் தூறும் அறிவு.’ என்பது குறள். ஆனால், அந்த அறிவும் கல்வியும் ஆக்கத்துறைக்கு வழிகோலுவதாகவும் உலகம் வாழ வழி கோலுவதாகவும் இருக்க வேண்டும் என்பதே வள்ளுவர் போன்ற நல்ல சான்றோர்தம் குறிக்கோள்,

“தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்”

என்று கல்வியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/165&oldid=1382049" இலிருந்து மீள்விக்கப்பட்டது