பக்கம்:தொழில் வளம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வளர்ச்சிக்குரிய அடிப்படைகள்

163


“அறிவினால் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தன்னோய் போல் போற்றாக் கடை”

என்று அறிவும் வள்ளுவரால் விளக்கப் பெறுகின்றன. எனவே, மற்றவர் இன்பத்தை வளர்க்கவும் மற்றவர் துன்பத்தைப் போக்கவுமே கல்வி அறிவு என்ற இரண்டும் பயன் பெறவேண்டும். இந்த நிலையில் இன்று நாட்டில் கல்வி இல்லை என்றாலும் உண்மையில் கல்வி இந்த அடிப்படையில் தான் அமைதல் வேண்டும். மற்றும் உலகம் செல்லும் போக்கினை அறிந்து அதன் வழியே தன் நாட்டையும் நாட்டு வளத்தையும் பிற நல்லியல்புகளையும் வளர்க்க வேண்டுவதே கல்வியாலும் அதன் வழி உண்டாகும் அறிவாலும் பெறும் பயனாகும். இதைத் திருவள்ளுவனார்,

“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவது அறிவு”

என்றும்,

“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்”

என்றும் காட்டுவர். எனவே, இந்த வகையில் தமிழ் நாட்டு மக்கள் சிறப்பாகச் செல்வரும் பாட்டாளிகளும் உலகின் பிற நாடுகளைப் போன்று பாரத நாட்டின் பிற பகுதிகளைப் போன்று வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கோடு அரும்பாடுபடுகின்றார்கள்.

மற்றும், நான் இங்கே கல்வி என்ற குறிப்பில் பொதுக் கல்வியோடு தொழில் வளர்ச்சிக்கு ஏற்றதான தொழிற்கல்வியையும் சேர்த்தே கூறினேன். தமிழ் நாட்டில் இன்று தொழிற் கல்வியை அரசாங்கத்தாரும் தனியாரும் பலவகையில் வளர்க்கப் போட்டியிட்டு முன் வந்துள்ளனர். ஒரு பொறியியற் கல்லூரி இருந்த இடத்தே ஆறு கல்லூரிகள். மாவட்டத்திற்கு ஒன்றுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/166&oldid=1382054" இலிருந்து மீள்விக்கப்பட்டது