பக்கம்:தொழில் வளம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வளர்ச்சிக்குரிய அடிப்படைகள்

165


தொழில் வளர்ச்சியில் போக்குவரத்தும் முக்கிய இடம் பெறுகின்றது. அதற்குமுன் மருத்துவம், நலத்துறை போன்ற ஒரு சிலவற்றைக் காண்போம். நாட்டின் பொதுவான நல்ல முறையில் நலத்துறை கவனிக்கப் பெறுதல் வேண்டும். அதற்கேற்ப மருத்துவத்துறை செம்மை அடைய வேண்டியுள்ளது. தமிழ்நாட்டு அரசாங்கத்தார் இத்துறையில் நன்கு முயன்று வந்துள்ளனர். இத்துறையில், வந்தபின் காப்பதினும் வருமுன் காப்பதே சிறந்த செயல் என உணர்தல் வேண்டும்; உணர்ந்து நாட்டில் பலவகைகளில் செயலாற்றுகின்றனர். இங்கே சிறப்பாகத் தொழில் சம்பந்தப்பட்டமட்டில் காணலாம். தொழிற்சாலைகளில் பணியாற்று கின்ற மக்களின் நலன் காக்கப் பல திட்டங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று ‘தொழிலாளர் இன்சூரன்ஸ் திட்டம்’. இதற்கெனத் தமிழ்நாட்டு அரசாங்கத்தார் ஆண்டொன்றுக்குச் சுமார் முப்பது லட்ச ரூபாய் செலவிடுகிறார்கள். சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர் இதனால் பயன்பெறுகிறார்கள் எனக் கணக்கெடுத்துள்ளனர். சென்னை, கோவை, மதுரை போன்ற தொழில்வளம் பெருகி வருகின்ற நகரங்களில் தொழிலாளர் நலனைப் பாதுகாக்க நல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் நிறுவியுள்ள தொழிற்சாலைகளில் தத்தம் தொழிலாளர்களுக்கென நலத்துறை, பொழுதுபோக்கு ஆகிய வகைகளில் எத்தனையோ தேவைகளை அறிந்து ஆவன செய்து வருகின்றார்கள். பல தொழிலாளர்களுக்குக் குறைந்த வாடகைகளில் பெரு வீடுகள் கட்டித் தருகிறார்கள். அதனால் தொழிலாளர்களும் மன நிறைவு பெற்றவராகித் தத்தம் தொழிலைத் திறம்படச் செய்து உற்பத்தியைப் பெருக்குகின்றார்கள். எனவே, முதலாளி தொழிலாளி என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/168&oldid=1382062" இலிருந்து மீள்விக்கப்பட்டது