பக்கம்:தொழில் வளம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

தொழில் வளம்


என் கண் முன் காட்சியளித்தது. மற்றும் பொருளியல் துறையில் வல்ல என் நண்பர் சிலர் இம்முயற்சி நாட்டுக்குத் தேவையானதென்றும் உடனடியாகச் செய்ய வேண்டிய ஒன்றும் என்றும் தத்தம்மாலான உதவியை அவ்வப்போது செய்வதாகவும் வாக்களித்தனர். அவர் தம் முயற்சி எனக்கு முதலில் ஊக்கம் அளித்தது. பின்னர் அரசாங்கச் சார்பில் தொழில்துறை நெறியாளரும் மின்சாரத் தலைமைப் பொறியாளரும் என் வேண்டுகோளுக்கு இணங்கி அவரவர் துறைகள் வளர்ச்சியுற்ற நெறிகளைப் பற்றிய குறிப்புக்களை அவ்வப்போது உதவி வந்தனர். சில தொழிற்சாலைகளை நான் நேரில் சென்று பார்த்தபோது அவற்றின் பொறுப்பாளர்கள் பரிவுகாட்டி எனக்கு வேண்டிய உதவிகள் அனைத்தையும் செய்தார்கள். சிலர் புகைப்படங்களையும் பிற குறிப்புக்களையும் கொடுத்து உதவினார்கள். இன்னும் அவர் தம் தொழில்துறை பற்றித் தேவையான எல்லாவற்றையும் கொடுப்பதாகக் கூறினார்கள். அத்தகைய நல்லன்பர் தம் முயற்சி அனைத்தும் சேர்ந்தே இந்நூலை உருவாக்கின என்று சொல்ல மகிழ்கின்றேன்.

இந்த நூலை எழுதத் தொடங்க நினைத்தபோது இன்றைக்கு மூன்றாண்டுகளுக்கு முன்—1961- இன் தொடக்கத்தில்—இதை இரண்டு பிரிவுகளாக அமைக்க வேண்டுமென எண்ணினேன். முதற் பகுதியில் தமிழ்நாட்டில் அன்று வாழ்ந்த தொழில் வளத்தையும், இன்றுள்ள வள நிலையையும், தொழிலுக்கு அடிப்படையான மூலப் பொருள், மின்சார்ம், முதலீடு, உற்பத்தித்திறன், ஆட்சி நிலை, வாணிபம் முதலியவற்றையும், அவற்றோடு தொழில் வளம் பெற உதவும் பிற பற்றியும் விளக்க நினைத்தேன். இரண்டாவது பகுதியில் இன்று அரசாங்கமும் தனியாரும் பல்வேறு வகையில் பெருக்கியுள்ள தொழில் அமைப்புக்களைப்பற்றித் தொகுத்து வெளியிடக் கருதினேன். எல்லாவற்றையும் எடுத்துக் காட்ட இயலாது என்றாலும் துறைக்கு ஒன்றாக்—வகைக்கு ஒன்றாக—ஒரு நூற்பாலை—ஒரு நெசவாலை—ஒரு தொழிற்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/17&oldid=1381940" இலிருந்து மீள்விக்கப்பட்டது