பக்கம்:தொழில் வளம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

15


பேட்டை—ஓர் உருக்கு ஆலை—என்ற வகையிலும் தனிப்பட்ட நெய்வேலி, பெரம்பூர் ரெயில் பெட்டித் தொழிற்சாலை என்றவற்றைக் காட்டும் நிலையிலும் ஒரு சிலவற்றைக் காட்டினால் நாட்டின் இன்றைய தொழில் வளம்பற்றி ஓரளவு உணர்த்த முடியும் என நினைத்தேன். வாய்ப்பு நேரு மேல் நான் இரண்டாம் பகுதியாகச் சேர்க்க நினைத்தவற்றைத் தனி நூலாகக் கொண்டுவரலாம். அப்பணியைக் காலத்தின் கையில் ஒப்படைத்து மேலே செல்லுகிறேன்.

இந்நூலில் எனது கட்டுரைகளைத் தவிர்த்து வேறு சிலருடைய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. மேலை நாடுகளுக்குச் சென்று தொழிற் கல்வியைப்பற்றி ஆய்ந்து அறிந்து பட்டம் பெற்றுவந்த என் மருகர் திரு.சோ. வேதபுரி B.Sc., B.E., M.Sc. (Birmingham) எழுதிய உற்பத்தித்திறன், மேலாட்சி பற்றிய இரண்டு கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அரசாங்க வெளியீடாகிய ‘பத்தாண்டுச் சாதனைகள்’ என்ற நூலிலிருந்து சில பகுதிகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. பிறவற்றிலுள்ள புள்ளி விவரங்களும், மின்சார நிலையங்கள் பற்றிய கருத்து; குறிப்பு முதலியனவும் அவ்வத்துறையில் வல்ல நெறியாளரும் பிறரும் அளித்தவையாகும். அனைவருக்கும் என் நன்றி உரித்து.

1961- இல், எழுதப் பெற்ற சில கட்டுரைகளில் உள்ள குறிப்புக்களை விடச் சில தொழில் துறைகள் இன்று மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளன. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டமுடிவிலேயே இந்நூலைக் கொண்டு , வரவேண்டுமென்று பெரு முயற்சி செய்தேன், எனினும் காலமும் சூழலும் பிற நிலைகளும் இடந்தரவில்லை. இன்று தான் என் எண்ணம் நிறைவேறுகின்றது.

இருபதாம் நூற்றாண்டில் ஒரு நாட்டின் செல்வ நிலையும் நாகரிகமும் பிற உயர்வுகளும் அந்நாட்டுத் தொழில் அடிப்படையிலேயே கணக்கிடப் பெறுகின்றன. எந்த நாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/18&oldid=1398201" இலிருந்து மீள்விக்கப்பட்டது