பக்கம்:தொழில் வளம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

தொழில் வளம்



நிலையில் நின்றாலும் பயிருக்குப் பாசன வசதிக்கு மின்சாரத்தைப் பயன்படுத்துவதில் தமிழ்நாடே முதனிலையில் உள்ளது. பம்பாய் கல்கத்தா நகரங்களில் பெரும்பாலும் மின்சாரம் தொழிலுக்குப் பயன்பட, தமிழ் நாட்டில் எல்லா மின்சார நிலையங்களும் இணைக்கப்பெற்று நாடு முழுதும் அதன் உதவி செல்லத்தக்க அளவு பரவியுள்ளது. 7500க்கு மேற்பட்ட நகரங்களும் கிராமங்களும் மின்னொளி பெற்றுத் தமிழ்நாட்டில் திகழ்கின்றன. இந்நிலை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத நிகழ்ச்சியாகும். இந்த மாநில முழுதுக்கும் ‘சென்னை மாநில மின்சார போர்டு’ நிர்வாக அமைப்பின் கீழாகவே மின்சாரம் பகிர்ந்தளிக்கப் பெறுகின்றது. இவ்வாறு மின்சாரத்தால் பயன்பெறுவோர் நாட்டில் மிக அதிகமாக வளர்கின்றனர். அவருள் பெரும்பாலோர் 68% நேராகவும் சிலர் நகராண்கழக அமைப்புக்கள் தனியார் துறை ஆகியவற்றின் வாயிலாகவும். பயன்பெற்று வாழ்வை வளமுற்றதாக்குகின்றனர்.

1908-ம் ஆண்டுக்கு முன் தமிழ்நாட்டுப் பொது நலத்துக்கும் மின்சாரத்துக்கும் தொடர்பே கிடையாது. மின்சாரமே இல்லை என்றுகூடச் சொல்லிவிடலாம். மலை நிலங்களிலுள்ள சில தேயிலைத் தொழிற்சாலைகளிளும் நீலகிரியிலுள்ள கதிரியி (Kateri) லும் நீருதவியால் தேவைக்கேற்ற சிறு சிறு மின்சார அமைப்புக்களைப் பெற்றிருந்த நிலையில்தான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டு மின்சாரம் இருந்து வந்தது. சென்னை நகரத்துக்கே முதன் முதன் 1909-ல் மின்சாரம் அளிக்கும் வகையில் ஆங்கில நாட்டுக் கம்பெனிக்கு முதலாவதாக ‘லைசென்ஸ்’ அளிக்கப் பெற்றது. அடுத்து -1925-ல் உதகையில் இத்துறையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/241&oldid=1382324" இலிருந்து மீள்விக்கப்பட்டது