பக்கம்:தொழில் வளம்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தாண்டுச் சாதனைகள்

273


பெருமளவில் தொழில் வளர்ச்சி ஏற்படுகின்ற கடடத்தில் தொழில் தாபனங்களே பயிற்சி கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வது மிகவும் தேவை. பெரம்பூர் ரயில் பெட்டி கட்டும் தொழிற் சாலையில் இவ்வாறு பயிற்சிகொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்கள். தனியார் துறையிலுள்ள பெரிய தொழில் தாபனங்களும் இந்தப் பணியில் ஈடுபட முன் வருவது மிகவும் அவசியம். இதற்கான திட்டம் ஒன்றை வகுப்பதற்குச் சர்க்காரும் வேண்டிய உதவியைச் செய்ய வேண்டும்.

சிறு ரகத் தொழில்கள்

ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு, பெருந்தொழில்கள் மட்டும் இருந்தால் போதாது. சிறிய தொழில்கள் பெருமளவில் அமைவதன் மூலமாகத்தான் வேலைவாய்ப்புகள் பரவலாக ஏற்படுவதுடன் மக்களின் தொழில் திறனும் வளர்ச்சி அடையமுடியும். சிறுரகத் தொழில்களை அமைப்பதில் நமது மாநிலம் முன்னணியில் இருந்து வருகின்றது. முதல் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் 12 லட்சம் ருபாய்தான் இத்துறையில் செலவழிக்கப்பட்டது. இரண்டாவது திட்டக் காலத்தில் 8,96 லட்சம் ரூபாய் சிறு ரகத் தொழில்களுக்காகச் செலவழிக்கப்ப்டுவதுடன் தொழில் பண்ணைகளை அமைப்பதற்கும் 1,54 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. கிண்டி, விருதுநகரில் இரண்டு தொழில் பண்ணைகளும் மார்த்தாண்டம், பேட்டை, மதுரை, திருச்சிராப்பள்ளி, ஈரோடு ஆகிய இடங்களில் ஐந்து தொழிற் பேட்டைகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. தஞ்சையில் அமைக்கப்பட்டு வரும் தொழிற்பேட்டை கூடிய விரைவில் தொழிற்படும். காட்பாடியில் ஒரு பேட்டை கட்டப்பட்டு வருவதுடன்

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/276&oldid=1382077" இலிருந்து மீள்விக்கப்பட்டது