பக்கம்:தொழில் வளம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

தொழில் வளம்


சேலத்தில் ஒன்றும் அமைப்பதற்கான முதனிலை வேலைகள் நடைபெற்று வருகின்றன. கிண்டியில் அமைக்கப்பெற்ற தொழிற்பண்ணை மிகச்சிறந்தமுறையில் அமைக்கப்பட்டு, தற்போது 128 தொழிற் கூடங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. சுமார் 13,000 பேர் இவைகளில் பணிபுரிந்து ஆண்டு ஒன்றுக்கு இரண்டு கோடிக்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருள்களை உற்பத்தி செய்கின்றனர். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரக்கூடிய தொழில் நிபுணர்கள், இப்பண்ணை அமைப்பைக் கண்டு அவர்களுடைய பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளார்கள்.

மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் சிறு ரகத் தொழில்கள் அமைப்பதற்காகவும், தொழில் பண்ணைகளுக்காகவும் மொத்தம் 112 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 1961-62-ல் கோவையில் வெப்பப் பக்குவச் சாலை (Heat treatment shop)கருவி நிலையம் (tools room) ஒன்றும், பொதுத் தொழில் வசதித் தொழிற்சாலை (common lease shop) ஒன்றும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சேலத்தில் கருவி நிலையமும் (tools room), மதுரையில் ஒரு பொதுத் தொழில் வசதித் தொழிற்சாலை (common lease shop) யும், கார்குடியில் ஒரு மரம் அறுக்கும் தொழிற்சாலை (saw mill) யும் அமைக்கப்படும். ஐந்து கிராமப் பட்டறைகள் (rural workshops) கரூர், நாமக்கல், திருப்பூர், நாகர்கோயில், விழுப்புரம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்படும். சென்னையில் இரும்பு உருக்குக் கட்டுமான (structural) தொழிற் சாலை ஒன்று தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது கோவையிலும் மதுரையிலும் கச்சாப் பொருள் கிடங்குகள் (raw materials depot)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/277&oldid=1399831" இலிருந்து மீள்விக்கப்பட்டது