பக்கம்:தொழில் வளம்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தாண்டுச் சாதனைகள்

275


ஆரம்பிக்க நிதிவசதி செயயப்பட்டிருக்கிறது. அத்துடன் மதுரை, கோயம்புத்தூர், நாகர்கோயில் ஆகிய இடங்களில் கருவி அமைப்புப் பயிற்சி (tool design) களுக்கான நிலையங்களும், பல்வகை அச்சு வார்ப்படம் (dyes),பீங்கான் பண்டம் (ceramic wares) செய்தல் போன்ற தொழில்கள் ஆரம்பிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். தனியார் துறையில் சிறு ரகக் கைத்தொழில்கள் ஆரம்பிக்கக் கடன் உதவி செய்வதற்காக ரூ. 30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது திட்டக் காலத்தில் கீழே விவரித்து இருக்கின்றபடி பல்வேறு இடங்களில் தொழிற் பேட்டைகளும், பண்ணைகளும் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்:-

(ரூபாய்
லட்சத்தில்)


(1) 5,000 ஜனத்தொகைக்கு உட்பட்டு
    இருக்கக் கூடிய இடங்களில் வேலைக்
    கூடம் (works shed)ஆரம்பிப்பதற்
    காக ... ... ... 5–80


(2) 20,000 மக்களுக்கு மேற்படாமல்
    இருக்கக்கூடிய நகரங்களில் இரண்டு
    பேட்டைகள் அமைக்க (அவைகளில்
    ஒன்று தேனியில் மற்றென்று விருத்
    தாசலத்தில் - பீங்கான் பாண்டத்
    (ceramic wares) தொழிற் பண்ணை
    யாக அமைக்கப்படும். ... ... , 25–00

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/278&oldid=1382090" இலிருந்து மீள்விக்கப்பட்டது