பக்கம்:தொழில் வளம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பத்தாண்டுச் சாதனைகள்

277


(ரூபாய்
லட்சத்தில்)

(8)

தொழிற் பேட்டைகளிலும் பண்ணை
களிலும் வாடகை மானியம் கொடுப்
பதற்காக ..... ..... 720

———————

மொத்தம்

...

3,00.00

———————


இவ்வாறு மூன்றாவது திட்டக் காலத்தில் மூன்று கோடி ரூபாய் அளவில் பல தொழிற் பண்ணைகளும் பேட்டைகளும் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தனியார் துறையில், பேட்டைகளும் பண்ணைகளும் அமைக்க முன் வருவார்களேயானல் அவர்கள் செய்யும் முதலீட்டில் 80 சதவீதம் எளிய வட்டி விகிதத்தில் கடனாகக் கொடுத்து உதவவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறு ரகத்தொழிலில் ஏற்பட்டிருக்கக்கூடிய முன்னேற்றத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு தனிப்பட்டவர்கள் பல தொழில்கள் ஆரம்பிக்க முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவ் வகையில் தமிழ்நாடு முழுவதிலும் சிறு தொழில்களைப் பரவலாக ஏற்படுத்துவதன் மூலம்தான் உண்மையான தொழில் வளம் பெருக முடியும்.

போக்கு வரத்து

தொழில் வளர்ச்சிக்கு முக்கியமாக வேண்டிய இன்னெரு வசதி நல்ல போக்குவரத்துச் சாதனங்கள். நம் மாநிலப் பகுதியில் சென்ற இரண்டு ஐந்தாண்டுத் திட்டக் காலத்திலும் புதிய ரயில் பாதைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/280&oldid=1399727" இலிருந்து மீள்விக்கப்பட்டது