பக்கம்:தொழில் வளம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

தொழில் வளம்


எல்லா முக்கிய சாலைகளையும் அரசாங்கமே எடுத்துக் கொள்ள வேண்டுமென்பது. சென்ற ஐந்தாண்டுகளில் 3,840 மைல் நீளமுள்ள சாலைகள் அரசாங்க நிர்வாகத்தின் கீழ்க் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து படிப்படியாக மேலும் முக்கிய சாலைகள் அரசாங்க நிர்வாகத்தின்கீழ்க் கொண்டுவரப்படும். தற்போது புதியதாக எடுத்துக்கொள்ளப்பட்ட சாலைகளுக்காக மட்டும் அரசாங்கம் வருடம் ஒன்றுக்கு 1,02 லட்சம் ரூபாய் அதிகமாகச் செலவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

பல புதிய பாலங்களையும் கட்டி, சாலைப் போக்குவரத்து வசதியை வளர்ச்சி செய்திருக்கின்றாேம். இரண்டாவது திட்டக் காலத்தில் சர்க்கார் நிர்வாகத்தின் கீழ் இருக்கக்கூடிய சாலைகளில் 31 பெரிய பாலங்களும், 120 சிறிய பாலங்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தற்போது சாலைகள் அமைப்பதற்கும் பராமரிப்புக்குமாக ஆண்டு ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் அளவுக்குச் செலவழித்து வருகின்றாேம். இவைகளில் சுமார் 3 கோடி ரூபாய் சாலைப் பராமரிப்புக்காக மட்டும் செல வாகின்றது. மூன்றாவது திட்டத்தில் சாலை அபிவிருத்திக்காக 11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுவரையிலும் மாவட்டக் கழக நிர்வாகத்தின் கீழிருந்து வந்த சாலைகளில் அரசாங்க நிர்வாகத்தின் கீழ்க் கொண்டு வரப்பட்டவை போக எஞ்சியுள்ள சாலைகளின் பராமரிப்பு, பஞ்சாயத்துக் கூட்டாட்சிகளின் பொறுப்பாகும். அதற்காக ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனுக்கும் தலை ஒன்றுக்கு 40 ந.பை. வீதம் சர்க்கார் மானியம் கொடுக்கப்படும். இதன் மூலம் வருடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/283&oldid=1382123" இலிருந்து மீள்விக்கப்பட்டது