பக்கம்:தொழில் வளம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தாண்டுச் சாதனைகள்

281


ஒன்றுக்கு 1,20 லட்சம் ரூபாய் செலவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்காலத்தில் சாலைகளின் தரத்தை உயர்த்துவதில் நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அவைகளிலும் சிறப்பாகத் தொழில் வளர்ச்சி ஏற்படக்கூடிய பகுதிகளில் பளுவான வாகனங்கள் செல்லக்கூடிய முறையில் பாலங்களைப் பலப்படுத்தவும் சாலைகளின் தரத்தை உயர்த்தவும் ஏற்பாடு செய்வது மிக அவசியம். இம்முறையில் சேலம்-நெய்வேலிப் பகுதியிலுள்ள ரோடுகளையும், கோயம்புத்துார்-மேட்டுர்ப் பகுதியிலுள்ள ரோடுகளையும், தூத்துக்குடிப் பகுதியிலுள்ள ரோடுகளையும் பலப்படுத்துவதற்குத் திட்ட மிட வேண்டும்.

சென்னை நகருக்குள்ளும் இப்போது போக்குவரத்து நெருக்கடி அதிகமாகிக் கொண்டு வருகிறது. அதற்கேற்ற முறையில் சாலை வசதிகளைப் பெருக்குவது மிகவும் அவசியம். தற்போது இருக்கக்கூடிய நெருக்கடியைத் தீர்க்கின்ற அடிப்படையில் மட்டும் நோக்காமல், 15 ஆண்டு அல்லது 20 ஆண்டுகளுக்குப் பிறகு எந்த அளவிற்குப் போக்குவரத்து பெருகிவிடும் என்பதையும் ஊகித்து, அதற்கேற்ற முறையில் சாலைகளை விரிவுபடுத்துவது அவசியமாகின்றது. இதற்காக மூன்றாவது திட்டக் காலத்தில் 1,50 லட்சம் ரூபாய் அளவிற்குச் செலவு செய்ய உத்தேசித்துள்ளோம்.

துறைமுகங்கள்

பெரும் தொழில் வளர்ச்சி ஏற்படும்பொழுது வெளிநாடுகளிலிருந்து இயந்திரம், சில முக்கிய மூலப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/284&oldid=1381581" இலிருந்து மீள்விக்கப்பட்டது